வெள்ளி, 9 செப்டம்பர், 2016

ஆயிரம் கை போதாது...

ஒற்றை நாள்
தற்செயல் விடுப்பவளுக்கு..
ஆசைகளடுக்கி
முன்னிரவு செய்கிறாள்.

அலாரம் அணைத்து
அரைமணிநேரம்
தூக்கம்..
வாசித்து பாதியில்
மடித்துவைத்த
புத்தகமொன்றை
முடித்துவிட..
மூலையில்
குவிந்தமலையென
துணிகளுக்கு
சலவை எந்திரம்
சுழற்ற..
மீன் விற்பவர் வருவாரா.
குளிர்ப்பெட்டி வைத்த
கீரை ஆயலாமா?
ஏதேனும் ஒரு
சீரியல் பார்க்கலாமா?
எதிர்வீட்டில்
கிளியுண்டே
கொஞ்ச நேரம்
தோள்களில் சுமக்க..
கண்ணாடிபார்த்து
நிறமாறிய முடி
பார்த்து நெட்டுயிர்க்க..
பள்ளிப்பிள்ளைகள்
வருவாரே
பலகாரம் ஏதேனும்
செய்ய..
தள்ளிப்போன
தாய்வீடு பேச..
ஆயுளின் நாள் தேடும்
வேலையுண்டு
அவளுக்கு..
இந்தவிடுப்பும்
கூட
தற்  செயல் விடுப்பு தான்.


8 கருத்துகள்:

  1. தொடர்ச்சியாய் எழுதாமல்
    நான்கு ஐந்து வரிகளுக்குப் பிறகு
    ஓர் சிறிய இடைவெளி விட்டு
    கவிதை தொடருமானால்,
    கவிதை மேலும் வலிமைபெறும்
    என எண்ணுகின்றேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  2. ஆயிரம் கை போதாதுதான்...அதற்கு இன்னும் இருக்கிறது அல்லவா...

    பதிலளிநீக்கு
  3. Pengalin tharseyal viduppaiyum, engal nirandhara panigalaiyum kannaadi pol piradhipalitha Meera.Selvakumar Ayyavuku nandrigal. Azhagana varthaigalil engal mana azhuthangal.

    பதிலளிநீக்கு
  4. அருமை ஐயா.தங்களின் கவிதைக்கு நான் இரசிகை ஐயா.நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நன்று சிறப்பாய் எழுதுங்கள் சிந்தனை விரித்து !

    வாழ்க வளத்துடன்

    பதிலளிநீக்கு