திங்கள், 24 அக்டோபர், 2016

ஒரு காதல் கடிதம்...

புத்தன் உன்னைப்
பார்த்திருந்தால்சித்தார்த்தன்
பிறந்திருப்பான்
சேர்த்து வைத்த
ஆசைகட்டி
மாலை ஒன்று
கோர்த்திருப்பான்..

ஆதி சிவன்
கண்டிருந்தால்
திருவோடு
எடுத்த சாபம்
உன் தெருவோடு
முடித்திருப்பான்.

பாண்டவர்கள்
பார்த்திருந்தால்
பாஞ்சாலி
மகிழ்ந்திருப்பாள்.

ராமன்
விழி பார்த்திருந்தால்
சீதைக்கொரு
பாவமில்லை..

பாரி
உன்னைப்
பார்த்திருந்தால்
பாவம் அந்த
வாச முல்லை.

கோவலனின்
கண்களிலே
கோலமயில்
பட்டிருந்தால்..
கோபம் கொள்ள
வாய்ப்புமில்லை..
கொலையாகும்
சேதியில்லை.

தேவதைகள்
தேசத்திலே
தேர்தல் வைக்க
தேவையில்லை..

முந்திப்பிறந்திருந்தால்
தொந்திக்
கணபதியும்
காத்திருப்பை
மறந்திருப்பான்..
கடைவீதி
திரிந்திருப்பான்.

காவியங்கள்
கதை மாறிப்
போயிருக்கும்..

பாயிரங்கள்
உனை நோக்கிப்
பாய்ந்திருக்கும்...

இல்லை.. இல்லை
என்பேன்
நான் உனக்குவமை..

என்ன செய்வாய்
உனக்கென்று
நீ கேட்டால்

கவிதை சொல்வேன்
போதாதா?

கருணை செய்யக்
கூடாதா?

6 கருத்துகள்:

 1. கவிதை அருமை கவிஞரே தொடரட்டும்... இன்னும்...
  த.ம.1

  பதிலளிநீக்கு
 2. அருமை
  அருமை
  இவ்வாறு கவி மழை பொழிந்தால்
  நிச்சயம்கருணை செய்வார்
  தம +1

  பதிலளிநீக்கு
 3. கற்பனை அழகு கவிநயம் அழகு
  விற்பனை என நெஞ்சில் ஆழ பதியும்
  உன் கவிதை வரிகள்

  பதிலளிநீக்கு
 4. கற்பனை அழகு கவிநயம் அழகு
  விற்பனை என நெஞ்சில் ஆழ பதியும்
  உன் கவிதை வரிகள்

  பதிலளிநீக்கு