வியாழன், 2 மார்ச், 2017

தேவதைக்கு தேர்வெதற்கு?

சின்னவள்
தேர்வெழுதப்போகிறாள்..


சட்டென
விரையும் காலம்
சின்னவளை
தேர்வெழுதச் சொல்கிறது..

அவள்
தேவதை குணம்
நிறைந்தவள்..
தேவபாஷை
அவள் மொழி..

கள்ளமில்லா
அவள்
சின்னப்புன்னகையால்
யாவும் வெல்லும்
சாகசக்காரி..

அவளின்
கதைப்புத்தகங்கள்
எப்போது
தேர்வுமுடியுமென
காத்துக்கிடக்கின்றன.

அவள்
விடியலில் எழ
அவள் அம்மா
நள்ளிரவே
தயாராகிறாள்..

பெரியவள்
அவளிடம்
அனுபவம்
சொல்லி
ஆற்றுப்படுத்துகிறாள்..

அலைபேசி
வழி நான்
அவளோடிருக்கிறேன்..

தேர்வெழுதும்
ஓரச்சமுமின்றி
கிளம்பிக்
கொண்டிருக்கிறாள்..

பிரார்த்தனையினூடே
குடும்பமே
இருக்கும்போது

கையசைத்து
செல்லும்..
தேர்வெழுதும்
அறைவாசலில்
திரும்பி நின்று
சிரிக்கிறாள்
சின்னவள்.





11 கருத்துகள்:

  1. சின்னவளுக்கு வாழ்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அவள் தேவதைகளுக்கெல்லாம் தேவதை...இவள் எப்படி மனித உருவில் இருக்கிறாள் என்பரும் புரியாத புதிர்...ஒரு குழந்தையால் இப்படி பேச முடியுமா...செயல் பட முடியுமா என்பதெல்லாம் ஆச்சர்யம்...சத்தியமாய் இந்த குணங்கள் என் வளர்ப்பால் வரவில்லை...இவளுக்கு யாரும் தீங்கே விளைவிக்க முடியாது..ஒரு சிறு எண்ணத்தில் அப்படித் தோன்றினாலும்.அவர்களும்.நன்றாய் இருக்க பிரார்த்தனை செய்யும் தேவதை இவள்..இன்று பிரின்சிபல் முதல் வகுப்பு ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் மாணவக் கூட்டங்களுக்கிடையே நின்ற இவளை தேடி வந்து வாழ்த்தியதோடு..வேதியியல் எடுக்கும் ஆசிரியை இவள் நெற்றி முத்தமிட்டு கை குலுக்கி வாழ்த்து சொன்ன விதம்...அடடா...இவள் மேல் ஏன் இத்தனை பேர் பிரியமாய் இருக்கிறார்கள்...சென்ற வருடம் கோயம்புத்தூர் கல்லூரி ஒன்று பேச்சு போட்டி நடத்த அக்கல்லூரி முதல்வர் இன்று வாழ்த்து தெரிவித்ததும் அதிசயம் தான்..

    அதான் சொல்லிட்டீங்களே தேவதை என்று...

    அப்படித்தான்...

    பதிலளிநீக்கு
  3. “சத்தியமாய் இந்த குணங்கள் என் வளர்ப்பால் வரவில்லை” அதாங்க எனக்கும் ஆச்சரியம்!
    என் அன்பான வாழ்த்துப் பூக்களும் தாய்-தந்தையின் வாழ்த்து மலர்களோடு இணைந்த நாராய் இருக்கட்டும்.
    அவள் நல்ல அறிவாளி! நல்ல படிப்பாளியும் கூட என்பது எனக்குத் தெரியும். நல்ல மதிப்பெண்களுடன், நாளைய உலகம் அவளது சாதனைகளைப் பற்றிப் பேசும்! மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  4. மனம் நிறைந்த வாழ்த்துகள் சின்னவளுக்கு.....

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துகள். மனா இறுக்கம் இன்றி இருப்பது நல்ல விஷயம். வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. தங்களின் அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு