திங்கள், 27 மார்ச், 2017

ஒரு கிலோ காதல்...

பி.ஜி நாயுடுவில்
கொஞ்சம் இனிப்பு...


பிஞ்சாய்
செல்லுகுடி
கத்தரிக்காய்..
மூன்று வார
ஆனந்தவிகடனும்
முந்தைய மாத
தடம் இதழும்..

ஆகாத
காய்கறியெல்லாம்
வாங்கிக்
குவிக்காமல்..
கறிவேப்பிலை
இந்தமுறை
அதிகமாய்..
கட்டாயமாய்
சின்னவள்
கேட்ட திரைப்படமொன்று..

சதர்ன் மளிகை
உலர் திராட்சை...

கட்டைப்பை
பிதுங்க..
இன்னும்
இருக்குமிடத்தில்
வைக்கலாம்..
ஒரு கிலோ காதல்..

9 கருத்துகள்:

  1. மற்றவைக்களுக்கு விலை மதிப்பிடுவது எளிது ஆனால் ஒரு கிலோ காதலுக்கு விலை கூற யாராலும் இயலாது

    பதிலளிநீக்கு
  2. Ayya, kadhalai kilo kanakkil andha kannadhasan kooda sonnadhillai. Parthu.....ration kadai oozhiyarin pennaga irundhal edai sariyaga irukadhu. Karpanaiyaga irundhalum miga azhagaga rasika vaikireergal.

    பதிலளிநீக்கு
  3. ஒரு கிலோ காதல் நல்ல கற்பனை ... ஆனால் வெங்காய போட்டோ ஏன்? உரிக்க உரிக்க ,,,,கடைசியில் ......அதுமட்டும் புரியவில்லை

    பதிலளிநீக்கு