செவ்வாய், 3 நவம்பர், 2015

திருத்தொண்டன்


அப்பூதி அடிகளிடம்
திருநாவுக்கரசு
வினவியது என்ன?
பத்து வரிகளுக்கு
மிகாமல்
விடையளிக்க விழித்துக்கொண்டிருந்தாள்.. 
முன்னிரவு முழுவதும்.

மெக்காலே தொடங்கி
பாலகனை
பாம்பு சூல் தோட்டம் ஏவிய
அப்பூதி வரை
தொடர்ந்தது கோபம்.

மடக்கியிருந்த
பாதம் பிடித்து
நீவுகிறேன்.
சின்னவள் சிரிக்கின்றாள்.

இன்னுமொரு
திருத்தொண்டன்.....

10 கருத்துகள்:

  1. சின்னவளுக்குக் கவிதை பாடும் திருத்தொண்டனோ...!!!!

    பதிலளிநீக்கு
  2. குழந்தைக்கு கால் பிடிப்பதும் சுகமே!

    பதிலளிநீக்கு
  3. திருத் தொண்டன் மட்டுமல்ல

    கவித்தொண்டனும் அல்லவா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊக்கப்படுத்தும் உங்கள் வரிகள்....நீங்கள் பெருந்தொண்டர்...

      நீக்கு
  4. பதில்கள்
    1. நன்றி கிரேஸ்......நாம் எல்லோரும் கொடுத்துவைத்தவர்களே....

      நீக்கு