வெள்ளி, 13 நவம்பர், 2015

இந்த மழை நமக்கல்ல...

அன்பின் சக்தி,
வான்மழை உனக்கு விடுப்பு தந்ததென்று சிரிக்காதே. அது மேகங்களின் அழுகை.சென்னையின் தீபாவளி என்னை இப்படியெல்லாம் எழுதச்சொல்கிறது.
உலகில் நாளை என்பதே மறந்துபோனது போல கடைவீதிகளில் கொள்முதல் கூட்டங்கள்.
யாதொரு உடையுமின்றி இருந்தார்களோ இதுவரை என்பதுபோல் உடைகளை உரிமையாக்குவதில் ஒரு உற்சாகம்.
இந்தியா ஏழைகளின் நாடென்று இனி சொல்லக்கூடாது..ஏழைகளாய் நம்மை நாமே மாற்றிக்கொள்ளும் நாடு.

மாலை ஆறு மணிக்கு தொடங்கிய வெடிகளின் ஓசை இரவு 11மணிவரை காதுகளுக்குள்.
எப்போதும் நான் புகைக்கையில் காதுகளில் புகைவரும் உன் அம்மாவுக்கு,அன்று நான் புகைத்ததே தெரியவில்லை.
இயற்கையும் எவ்வளவோ மன்றாடி கண்ணீர் விட்டுத்தான் பார்த்தது.
மனுசப்பயல்....என்னமாய் ஆடிவிட்டான்.

ஒரு சந்தேகம் சக்தி.. எனக்கு.

சமீப காலமாய் வந்துபோகும் அட்சய திதியின் வரலாறு நமக்குத்தெரியும்...முதலாளிகளின் கைவண்ணம் என்று..அதைப்போலவே தீபாவளி என்ற ஒன்றும் தந்திரமாகவே புகுத்தப்பட்டிருக்கவேண்டும்.
எத்தனை பணங்கள் காகிதங்களாய் சிதறிக்கிடக்கின்றன.?
எத்தனை மனிதர்களை புலம்ப வைத்து...புலம்பெயர வைத்திருக்கிறது.
சாலைகள் தோறும் மிதிபடும் குப்பைகள்..
வேதாளங்களாய் மாறிப்போன இளைஞர் கூட்டம்...

எவன் சொல்லிப்போனது..
இப்படி தீபாவளி கொண்டாடச்சொல்லி?
நடையோர மனிதர்களுக்கு,ஓர் உடையுமில்லா என் மக்களுக்கு யார் கேட்டது இந்த தீபாவளி?
அசுரனைக்கொன்றதால் கடவுள் தந்த வரமெனில்,
பட்டினியிலும்,ஏக்கங்களிலும் தினம் செத்துக்கொண்டிருக்கும் இந்த மக்களுக்கு கடவுள் எத்தனை தீபாவளிகள் வரமளிக்க...?

வேதங்கள்,இதிகாசங்கள் இன்னும் எத்தனையோ காரணங்களை அடுக்கிக்கொண்டிருப்பவர்கள் நினைத்தது, இப்படி ஒரு தீபாவளியைத்தான் என்றால், வெடிக்க வேண்டியது வெடிகள் அல்ல....வீணான நம்பிக்கைகளை.

பட்டாசுப்புகையில் சிட்டுக்குருவிகளைக் கொன்றுவிட்டு,என்ன சொல்கிறது உங்கள் வேதங்கள் ஜீவகாருண்யம் பற்றி?
தீபாவளி கடந்த நாளில் கிடக்கும் குப்பைகள்... குப்பைகள் அல்ல....மனங்கள்.

என்ன செய்யலாம் சக்தி?
பட்டாசுகள் தவிர்த்து,
ஆடம்பரங்கள் மறந்து,
பட்டிமன்றங்கள் மூடி,
எந்த வனத்திலும்
வேதாளமாய் ஆடாமல்..
முடிந்தவரை சொந்தங்களோடு,
குறந்தபட்சம் குடும்பத்தோடு...
கொண்டாடுவோமா
இனிவரும்
தீபாவளி.?

அன்புடன்.
செல்வக்குமார்

16 கருத்துகள்:

  1. இனியேனும் இல்லாமல் போகட்டும் தீராவலிதரும் இந்த தீபாவளி கொண்டாட்டங்கள்!

    பதிலளிநீக்கு
  2. நல்ல முடிவு..வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  3. நெஞ்சை உலுக்கிய உண்மை விடயங்கள் நண்பரே ஆம் வேண்டாமே இந்த தீரா....வலி

    பதிலளிநீக்கு
  4. முன்னொர் சொன்னதையே..கேட்கதாவர்கள்..பின்னோர் சொல்வதையா...கேட்கப்போகிறார்கள்,,,.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சங்கை ஊதுவோம்...என்றுதான்....யாரேனும் இதற்கு சங்கு ஊதிவிட மாட்டார்களா என

      நீக்கு
  5. உண்மை சகோ, அனைத்தும் வர்த்தக முதலாளித்துவ சூழ்ச்சிகள்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தோழி...உங்கள் பின்னூட்டங்கள் எங்களுக்கு சத்தூட்டங்களாக...சின்னவள் உங்கள் பின்னுட்டங்களை கொண்டாடுகிறாள்.

      நீக்கு
  6. இந்தியா ஏழைகளின் நாடென்று இனி சொல்லக்கூடாது..ஏழைகளாய் நம்மை நாமே மாற்றிக்கொள்ளும் நாடு.// இதை நான் அடிக்கடிச் சொல்லி வருவதுண்டு. எனது பழைய பதிவுகளில் கூட சொல்லியதுண்டு. உண்மை இதுதான் செல்வா சகோ....

    அது போல் பல விடயங்கள், அட்சய திருதியை, பட்டாசு எல்லாமே வர்த்தக ரீதியில் புகுத்தப்பட்டவைதான். ஒரு காலத்தில் கிராமங்களில் திருவிழா சமயங்களில் சொக்கபானை என்று தீ கொளுத்திக் கொண்டாடுவார்கள். நாளடைவில் வர்த்தகமாக்கிவிட்டார்கள் சுயநலவாதிகள். அருமையான கருத்துகள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை அம்மா....இது முழுக்க முழுக்க உணர்வுகளின் வெளிப்பாடு தான்

      நீக்கு