வியாழன், 5 நவம்பர், 2015

உயிர் உரசும்..ஒரு துளி...

வலுக்கத்தொடங்காத
மழைக்கு முன்னே
சிறுசாரல் தெளிக்கும்
தாழ்வாரத்தில்
இருக்கின்றோம்
நானும்
சின்னவளும்.

இறுக்கிப்
போர்த்தி விடுகிறேன்.

இடுக்கின் வழியே
மழைநீர் பிடித்து
என் மீது
விசுறுகிறாள்.

நெற்றி வழிந்து
உதடு உரசி
உயிரை
நனைக்கிறது....

23 கருத்துகள்:


  1. வணக்கம்!

    புதுக்கோட்டை நண்பர்! புகழ்த்தமிழ் அன்பர்!
    மதுக்கோட்டைப் பாட்டின் மனத்தர்! - இதமாய்
    உயிர்உரசும் ஓர்துளியை ஓதி உவந்தார்!
    குயில்உரசும் இன்பம் குவித்து!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெள்ளைத்தோல் விளையாடும் விந்தை நாட்டில்
      கள்ளைப்போல் தமிழ் வடித்தாய்
      முள்ளைப்போல் இருக்கும் என்வரியில் பிழைகள்
      பிள்ளைபோல் அணைத்திட்டாய் வாழி!

      நாளும் நல்லநாளாக உன்வரிகள் -கவி
      ஆளும் தமிழ்க்கோவே எனக்காக
      பாழும் உலகின்னும் என்னெழுத்து சீண்டலையே
      வாழ்த்திய தாச...இனிஏக்கமில்லை.

      உன்தோட்ட பூவெல்லாம் உயிரோ டாடும்
      என்பாட்டின் ஓரெழுத்தும் உன்னாலென்பேன்
      வலைப்பூவில் காகிதப்பூ கட்டிவிற்றேன் - தமிழ்
      மலைக்கோவே வாழ்த்தியதால் வாசம் பார்...

      முத்தங்கள் நிறைந்த நாட்டில் -தமிழ்ச்
      சத்தங்கள் உன்னால் கேட்டோம்
      உச்சத்துக் கவிஞர்குல வரிசையிலே-புவி
      மிச்சத்து ஓர்கவியே இன்னும் தா.

      நீக்கு
    2. பாரதி தாசரே பாவால் புகழ்ந்துவிட்டார்
      நீரதில் இன்னும் நிறையப் பெற,இவரே
      பாவகை கோத்த பதிவும், விஜூநடையில்
      பாவகை பார்த்தும் பழகு.

      நீக்கு
    3. முத்தங்கள் நிறைந்த நாட்டில் தமிழ் சத்தங்கள் சொன்னார்தான்.சத்தங்கள் சந்தங்கள் ஆனது..
      அங்கு வெள்ளத்தோல் போர்த்திய தேசத்திலும் தமிழ் வளர்க்க முடிகிறது. இங்கே கள்ளத்தோல் போர்த்திய தேசத்தில் தமிழ் கலக்கமுறுகிறது..

      நீக்கு
    4. அன்னம் போல் இருந்து பாருங்கள் கவிஞரே
      எண்ணம் போல் வளர்வீர்
      இங்கும் இருக்கிறார்கள் நல்லோர்.
      இனம் காண வேண்டும். அவ்வளவே.

      நீக்கு
    5. ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க இங்கயும்!! ஹ்ஹஹஹ் ரசிக்கின்றோம்...

      நீக்கு
  2. சாரளில் நனைவது இன்பம்
    அன்பு மகளின் விரல் வழி மழையின்
    நனைவது பேரின்பம்
    அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
  3. சிறுகை விசிறிய துளிகள் உயிர் நனைக்கும் தான்..
    அழகிய கவிதை...
    அடைமழையாய் பொழியப் போகும்
    கவிதை மழைக்கான காத்திருத்தலோடு நானும்..

    பதிலளிநீக்கு
  4. பாட்டரசர் பாரதி வாழ்த்துகிறார்...
    வலையரசர் டிடி மகிழ்வைக் கூட்டுகிறார்.
    பேச்சரசர் நா.மு நயந்தே வியக்கின்றார்..
    அமிர்தாவும் கில்லர்ஜியும் அழகாய் உரைக்கின்றார்..
    நன்றாய் விடியட்டும் பொழுது..
    நலமாய் தொடங்கட்டும் இனிது.
    உங்களுக்கும் சின்னவளுக்குமான தூரத்தைத் துரத்துங்கள்
    அதுவே அவளுக்கு மகிழ்வு

    பதிலளிநீக்கு
  5. மன்னிக்க
    கரந்தையார் கனிவாய்ச் சொன்னார் என்பதனையும் இணைத்துக் கொள்க

    பதிலளிநீக்கு
  6. உன் சொற்களில் கட்டுண்டு காதலாகிப் போனேன்

    பதிலளிநீக்கு
  7. வலைப்பூவில் காகிதப்பூ கட்டிவிற்றேன் - தமிழ்
    மலைக்கோவே வாழ்த்தியதால் வாசம் பார்..
    அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
  8. வலைப்பூவில் காகிதப்பூ கட்டிவிற்றேன் - தமிழ்
    மலைக்கோவே வாழ்த்தியதால் வாசம் பார்..
    அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
  9. சின்னவளே இன்னும் கொஞ்சம் அள்ளி வீசம்மா....கவிதைகள் பிறக்கும் உன் தந்தையிடமிருந்து...!!!!! நாங்கலும் இன்னும் நனைவோமே

    பதிலளிநீக்கு