செவ்வாய், 19 ஜனவரி, 2016

ஆத்தா...நீ பாஸாயிட்ட...

தொடர்பு
எல்லைக்குள்
தான்
இருக்கின்றாள்.

தொட்டு
அவள்
வரி
தடவ
விட்டு
என்னை..
ஓடுகின்றாள்.

ஏனென்றும்
தெரியாமல்
நான்
புலம்ப..

ஆன்லயனில்
ஆடுகிறாள்
சொற் சிலம்பு..

பிரிவுத்துயர்க்கடலில்
நான்
தவிக்க..
தூரத்து
மணிவிளக்கை
கண்களுக்குள்
ஒளிக்கின்றாள்.

ஆலயம்
நான்
அடியெடுத்து
வைக்கும்
வேளை..
அந்த
அழகுத்திருக்கோயில்
அவசரமாய்
மூடுகிறாள்..

காதலுண்டு
நானறிவேன்
கர்வக்காரி...
கண்களுக்குள்.

நான்
சாதல்கண்டும்
சிரித்தா போவாள்...?

அடிப்போடி
நீ
வென்றுவிட்டாய்...
இந்த
சில
நாளில்
என்னைக்
கொன்றுவிட்டாய்..

எழுத்தறிந்த
நாள்முதலாய்
எடுத்தெறிந்த
காதல்கவி
துடித்தெழுத
வைத்துவிட்டாய்...

உலைவாய்,
ஊர்வாய்
இரண்டும்
மூடலாம்..
உன்
வாய்
மூடல்
பாவம்..

படுத்தெழும்
விழிகள்
உன்
வரி
தேடும்..

பாதகத்தி..
என்
தவிப்பு
உனை
பனிப்புகையாய்
மூடும்..

கூச்சம்
எனைத்தின்ன
கூச்சல்
தவிர்க்கின்றேன்..

எனை
ஆட்டுவிக்கும்..
உயிர்ப்பூவே..

காட்டடி
உன்
திருமுகத்தை..

உயிர்க்கின்றேன்..








6 கருத்துகள்:

  1. ஆஹா! அருமை அருமை என்ன ஒரு தவிப்பு!!படுத்தெழும்
    விழிகள்
    உன்
    வரி
    தேடும்..// ரசித்தோம்..

    பதிலளிநீக்கு
  2. அடிப்போடி
    நீ
    வென்றுவிட்டாய்...
    இந்த
    சில
    நாளில்
    என்னைக்
    கொன்றுவிட்டாய்..// ஓ அதான் ஆத்தா நீ பாஸாயிட்ட என்ற தலைப்போ!!

    பதிலளிநீக்கு
  3. திருமுகம் காட்டாமல் ஏன் தவிக்க விடுகிறாள்?
    :-)
    கலக்கல் கவிதை சகோ

    பதிலளிநீக்கு
  4. என்னமோ சொல்ல வருவது எல்லோருக்கும் புரிகின்றது, எனக்கு மட்டும் புரியவே இல்லை.

    ஆனாலும் ஒரு கேள்வி... திருமுகம் கண்டீர்களா இல்லையா?
    கவிதை வரிகள் அழகு.அதில் தெரியும் தவிப்பின் உணர்தல் அருமை

    இன்னும் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு