புதன், 26 அக்டோபர், 2016

திருடா..திருடா..

கூரையில் பொழிந்த கல்மழை நாளொன்றின் நள்ளிரவில்
டயர்கள் கொளுத்திய கரும்புகைசூழ் வீதியுலாவில்
உன் வாசல் கடந்தேன்..



ஆட்டுகுட்டி அணைத்து உறங்கிபோயிருந்தாய்..
குட்டியின் கால்கள் பொருதிக்கிடந்த தோளின் அடர்வண்ணப்பாசியொன்று நிறுத்திவைக்கும் தேடலை.
பூக்கள் மூடிய மலையென கவிழ்ந்துகிடக்கும் உன்
மோகனத்தூக்கத்தில்
நெளியும் வரிகளடர்ந்த உதடுகள் உருமாறுகின்றன வலையாய்...
மருதாணியிட்ட உள்ளங்காலின் சிறுவட்டம் சுற்றும் விட்டிலொன்று முட்டிப்பார்க்கிறது சிவப்புக்கோளத்தை..
வெளிர் நீல விளக்கொளி கசியும்
அந்நிசியில்
பவளமல்லியென.
மயக்கக்காற்று
ஊஞ்சளாடிக்கொண்டிருக்கிறது..

அவர்கள்
திருடனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

2 கருத்துகள்: