திங்கள், 27 மார்ச், 2017

காணொளியில் சின்னவள் கவிதை..

சின்னவள் குறித்த உற்சாகம் மீண்டும் என்னை பிறப்பித்து இருக்கிறது..
யுகங்களின் வலிகளை..துயரங்களை,வரலாற்றை எல்லாம் எழுதிப்போன முன்னேர்களின் பின்னே பனை நுங்கு மட்டையின் வண்டியென ஓட்டிப்போகிறேன்.

ஆற்றமுடியா நெஞ்சின் அழுத்தங்கள் தான் வரிகளாய் பீறிடுகிறது..
இழுத்த இழுப்புக்கெல்லாம் இழுபடும் ஒரு ரப்பராய் மாறிப்போன நடைமுறை வாழ்க்கையில் அமரமுடியாமல் கால்களை மட்டும் இதப்படுத்தும் இதம் என் வரிகளில் அடைகிறேன்..

நேசம்...உருக்கம்..பகடி என எல்லாச்சுவைகளும் கலந்திருக்கும் பழக்குவியல்களில் நான் சோகமென்னும் சுவையில் ஈர்க்கப்படுகிறேன்..

நேர்மறை எண்ணங்கள் தான் வேண்டுமென வற்புறுத்துகின்றன நலம் விரும்பிகள்..

என் எழுத்துக்களை ஆசிர்வதிக்கின்றன அன்புகள்.
வாசித்ததும் விரியும் கருவிழிகள் காட்டிக்கொடுக்கின்றன அன்பையும்...பிரியத்தையும்.

சின்னவள் குறித்த ராசி.பன்னீர் செல்வம் அய்யா அவர்களின் மனம்திறந்த விமர்சனம் என்னை மிதக்க வைத்திருக்கிறது..

எழுது எழுது என என்னை உற்சாகமூட்டும் உங்கள் ஆதரவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..

சின்னவளின் கவிதைகளை சின்ன சின்ன காணொளியாக்கி வெளியிடலாமா என்ற ஆசை இருக்கிறது...

சின்னவளின் முதல் கவிதையை அது எழுதப்பட்ட காலத்திலேயே..
மதிப்புமிகு சொற்களால் வாசிக்கப்பட்டு விட்டது.

அந்த கவிதையை முழுசும் வாசித்து வாழ்த்திய மாண்பமை அழகப்பா பல்கலை கழக துணைவேந்தர்.சுப்பையா அவர்களுக்கு எப்போதும் என் நன்றிகள்...





7 கருத்துகள்:

  1. ஆம்...அவர் வாசித்ததை அன்றும்.காணொளி மூலமே கண்டேன்...சின்னவள் சிரிப்போடு இருந்தாள்

    பதிலளிநீக்கு
  2. கவிதையை வாசித்தவரின் குரல் மிக நன்றாக இருந்தது அதை அவர் மிக தெளிவாக பேசினார்

    பதிலளிநீக்கு
  3. எழுது எழுது என
    நாம் உற்சாகமூட்டுவோம்
    தங்கள் எழுத்துப்பணி தொடர

    பதிலளிநீக்கு
  4. கவிதாயினிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு