திங்கள், 14 டிசம்பர், 2015

மழை சூழ் மாநகர் ....

கேன்களில் குடிநீர்
தேடியலைந்தோம்
வீட்டுக்குள்
பெரு மழை

××××××

படகினில் தொலையும்
அகதியின் நிலையை
அறிந்திட வந்த மழை

×××××××××

காதலர் புரண்டிடும்
கடற்கரை மணலை
கழுவிப்போன மழை

×××××××××

பாம்புகள் சூழ
பரிசல் பயணம்
பார்த்திட வைத்த மழை

×××××××××

என்ன விலையிலும்
எதையும் விற்கலாம்.
பொல்லார்க்கும்
ஒரு நாளில்
பொசுக்கென
பெய்த மழை

××××××××

சுதந்திர நாடு
சுழன்றிடும் அழகை
சொல்லாமல்
சொன்ன மழை

××××××××

காணுமிடங்களில்
கட்டட மாயங்கள்
கணக்கிட வந்த மழை

×××××××××

தூண்டில் இரையென
உணவுப்பைகளை
வாங்கிட வைத்த மழை

××××××××××

இயற்கையின் பிழையென்று
என்னென்ன சொன்னாலும்,,

பொய்யன்று

பெய்த மழை..

××××××

வழியத்தொடங்கும்
வந்த மழையில்

வல்லரசுக்கனவுகள்
ஒதுங்கிக்கிடக்கலாம்.

தகவல் தாருங்கள்

தேர்தல் வருகிறது.

-மீரா.செல்வக்குமார்.

12 கருத்துகள்:

 1. // வல்லரசுக்கனவுகள்
  ஒதுங்கிக்கிடக்கலாம். //

  ஆகா..! அப்படிச் சொல்லுங்க...!

  பதிலளிநீக்கு
 2. இலவசமாத் தாரோம்னு சொன்ன உடனே மாறிடுவாங்க...நீங்க என்னமோ...ஹா...ஹா...

  பதிலளிநீக்கு
 3. மழை வாழ்க்கையை உணர்த்திய உண்மைகள்.

  பதிலளிநீக்கு
 4. //இயற்கையின் பிழையென்று
  என்னென்ன சொன்னாலும்,,

  பொய்யன்று

  பெய்த மழை..//

  அருமையான கவிதை.

  பதிலளிநீக்கு
 5. //பொய்யன்று பெய்த மழை//
  //வல்லரசுக்கனவுகள்// அருமை சகோ

  பதிலளிநீக்கு
 6. காணுமிடங்களில்
  கட்டட மாயங்கள்
  கணக்கிட வந்த மழை

  ×××××××××

  வழியத்தொடங்கும்
  வந்த மழையில்

  வல்லரசுக்கனவுகள்
  ஒதுங்கிக்கிடக்கலாம்.

  தகவல் தாருங்கள்

  தேர்தல் வருகிறது.//

  ரசித்தோம் அனைத்தையும். தேர்தலுக்கான தகவல்கள் தந்துகொண்டிருக்கின்றோமே!!! நோட்டு கொடுத்து ஓட்டு போடச் சொன்னா மக்கள் நோட்ட வாங்கிட்டு "நோட்டா" போட்டா நல்லாருக்கும். நல்ல ஆளுமை உள்ள தலைமை நம்மை ஆள்வதற்கு இன்னும் வரவில்லையே...

  பதிலளிநீக்கு
 7. கேன்களில் குடிநீர்


  அருமை நண்பரே...தேடியலைந்த தண்ணிர் கிடைக்கும்போது குடிக்க முடியாததே....
  வீட்டுக்குள்
  பெரு மழை

  பதிலளிநீக்கு
 8. கேன்களில் குடிநீர்


  அருமை நண்பரே...தேடியலைந்த தண்ணிர் கிடைக்கும்போது குடிக்க முடியாததே....
  வீட்டுக்குள்
  பெரு மழை

  பதிலளிநீக்கு
 9. அனைவருக்கும் இலவச படகு
  மக்களுக்கு மறந்திடும் வந்த மழை

  பதிலளிநீக்கு
 10. சின்னச் சின்னதாய் கவிதைகள்.... நிஜம் சொல்லும் கவிதைகள்.

  பதிலளிநீக்கு