சனி, 26 செப்டம்பர், 2015

பெண்ணின் பெருந்தக்க...

இறைவன் ரொம்ப பிஸியாக இருப்பதாலும் அடிக்கடி தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விடுவதாலும்.. தன்னுடைய பணிகளை பார்த்துக்கொள்ள தாய்களைப் படைத்ததாய் கூறுவார்கள்.


நாடு ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டிருந்த நூற்றாண்டுகளுக்கு முன்னேயும் பெண்கள் அடிமைப்பட்டிருந்த காலமுண்டு.
வெறும் அடுப்பூதும் பெண்களாக..
பெற்றுப்போடும் இயந்திரங்களாக..
மார்ச்சீலையும் மறுதலிக்கப்பட்டிருந்த விலங்குகளாக
நினைத்தாலே வலிக்கும் சதி தேவிகளாக...
பால்மணம் மாறாத விதவைகளாக...எத்தனை கொடுமைகள்...பாவபட்ட ஜீவன்களாய்...

அப்பன் பாரதி ஆங்கோர் மரத்திடை அக்கினிக்குஞ்சொன்றை வைத்தான். பற்றி எரிந்தது நாடு.. பாதகம் செய்வோர் முகத்தில் உமிழ்ந்து விடச்சொன்னான் பாப்பாவை...

பாரதி தாசனோ பூவையர் போற்றினான்.
’மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’
என எத்தனை வேள்விகள்..எத்தனை போராட்டங்கள்...

பெண்கள் சுதந்திரமாதாய் பேசிக்கொள்ளும் இந்த காலத்திலும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது விவாதங்களும்.. போராட்டங்களும்.


‘எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணிற் பிறக்கையிலே
அது நல்லவராவதும் தீயவராவதும் 
அன்னை வளர்ப்பதிலே’


அடுப்படியே அவள் வேள்விக்கூடமாய் இருந்தாலும் அவள் தியாக ஒளி வீடெல்லாம் விளக்கேற்றும் ...


அப்பாக்கள் இல்லாத பிள்ளை எப்படியும் பிழைத்துக்கொள்ளும்...
அம்மாக்கள் இல்லாத குழந்தைகள் தான் அநாதையாகிப்போகிறார்கள்..

இந்த உலகம் பூவையரைத்  துச்சமென மிதித்த காலம் ஒன்று இருந்ததென்பதை மறுப்பதற்கில்லை...ஆயினும் காலம் அவர்களையும் கரையேற்றித்தானிருக்கிறது.
இணையங்களால் இணைந்திருக்கும் இன்றைய வாழ்க்கைச்சூழல் பெண்ணென்ற பேதம் கொள்வதில்லை..

பெற்ற சுதந்திரத்தை காப்பாற்றாமல் போனதில் இந்தியர்களுக்கு எந்த விதத்திலும் பெண்கள் சளைத்தவரில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து(பெண்ணுரிமைச்சிங்கங்கள் பொருத்தருள்க..)

கட்டுப்பாடற்ற சுதந்திரம் எல்லாவற்றையும் நாசமாக்கும் என்கிறான் ஒரு அறிஞன்..

உண்மையில் இப்போது பெண்கள் சுத்ந்திரத்தின் பொற்காலத்தில் இருக்கிறார்கள்...
நாட்டின் முதற்குடிமகளாய்,, முதல்வராய், விமானியாய்,மாலுமியாய்,ஓட்டுனராய்,கட்டுனராய்,கணிப்பொறி வல்லுனராய், காவலராய்...
எல்லாமுமாய் இருக்கிறார்கள்..

யாரேனும் சீண்டினாலும் பொங்கி எழுகிறார்கள்..

ஆனாலும் என் தெய்வங்களே...
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்..

உடல் பிதுங்கும் ஆடைகள் தேவைதானா..?
புருவங்கள் சிரைக்கும் வைபவங்கள் அவசியமா?

நீங்கள் நீங்களாய் இருக்கும் வீடுகளில் முதியோர் இல்லங்கள் தேவைப்படுவதில்லை.

இணையம் என்பதும் இருபாலருக்கும் தான்..
உங்கள் எழுத்துகள், கருத்துகள் போலவே உன்கள் செய்திகளூம் உலகை அடந்து விடுகின்றன விரைவாகவே..


இன்னுமிருக்கிறது
உன்களுக்கான இலக்கின் தூரம்
எழுந்து வாருங்கள்..எழுத வாருங்கள்..
புரையோடிக்கிடக்கும் இந்த சமூகத்தின் நரம்புகளுக்கு புது ரத்தம் பாய்ச்சவேண்டும்

சமீப காலமாய்..
மதுவிலும் புகையிலும்.மற்ற பிறவிலும் போட்டிக்கு வரத்தொடங்கி இருப்பதாய் ஊடகங்கள் அலறுகின்றன....
வேண்டாம் பாவம் விட்டுவிடுங்கள்...அந்த சாதணைகளை அவனே வைத்துக்கொள்ளட்டும்..
நீங்கள் ,
படிப்பதில் போட்டி போடுங்கள்.
பணிகளில் வேகம் கூட்டுங்கள்.சாதனைகளில் சரி நிகர் சமானம் கொள்ளுங்கள்

எத்தனையோ இருக்கிறது வென்றெடுக்க...

5 கருத்துகள்:

 1. எத்தனையோ இருக்கிறது வென்றெடுக்க...... உண்மை தான்.
  நல்ல படைப்பு. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. நல்ல கருத்துகள். பகிர்வுக்கு நன்றிகள். போட்டியில் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள் .

  பதிலளிநீக்கு
 3. சாதிக்கத் துடிக்கும் மகளிர்க்குப் போதிக்கத் தேவையில்லை.
  மகளிர் மேன்மைகளை மனம்விட்டுப் படைத்துள்ள கட்டுரை அருமை. வெல்க போட்டியில்.

  பதிலளிநீக்கு
 4. ஆத்தாடி இனியும் நான் எழுதனுமா...வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. மரியாதைக்குரியவரே,
  வணக்கம். ஆகஸ்டில் துவக்கிய வலைப்பக்கத்தில் இப்படி ஒர சிறப்பான கட்டுரையா? வாழ்த்துக்கள்.
  என அன்புடன்,
  C.பரமேஸ்வரன்,
  http://konguthendral.blogspot.com
  சத்தியமங்கலம்,
  ஈரோடு மாவட்டம்-638402

  பதிலளிநீக்கு