ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

சின்னவள் சிரிக்கிறாள்..

வீட்டின் கூடம் தாண்டி விளையாடித்திரிந்தோம்.

சிட்டுக்குருவிகள் வீட்டுக்குள்கூடுகட்டும்

ஒரு நாளும் வீட்டுக்குள் படுத்ததில்லை
வீதி எங்கள் பள்ளியறை.



அரசுப்பள்ளியன்றி வேறொன்றும் அறிந்ததில்லை.
பிள்ளையென்றும் பெண்னென்றும்
பேதங்கள் இருந்ததில்லை.

சாமிக்கு தேரிழுத்து சென்ற நாங்கள்...
சாவுக்கு தோள் கொடுக்க மறுத்ததில்லை.

தாத்தாவின் வேட்டி முடிப்பில் பலகாரம்,
பாட்டியின் சுருக்குப்பையில் காம்புடன்,கதைகள்.

அத்தைகளின் அலங்காரம்,
அடுப்படி மரஅடுப்பில் அம்மாவின் அலங்கோலம்.
அத்தி பூத்தாற்போல் அப்பாவின் குறுஞ்சிரிப்பு.

வருடமொருமுறை வண்டிகட்டிச் செல்லும்
திருவிழா இரவுகள்
'பொசுக்'கென விடிந்த மாயமின்னும் புரியவில்லை.

மாமாக்கள் கற்றுத்தந்த நீச்சல்...

சித்தப்பா பெரியப்பா சின்னத்தை பெரியத்தை...
எல்லாமாய் இருந்த வீடு..

என் அத்தை இருவருக்கு மணமுடித்த முற்றம்.

என்னோடு எல்லோரையும் பெற்றுப்போட்ட உள்கூடம்..

வரிசையாய் உட்கார்ந்து விருந்துண்ட நடு வீடு...

செத்துப்போன தாத்தா. பாட்டி
சிங்காரிச்சு வைத்த திண்ணை.

கூடுகள் கலைவது போல்
வீடுகள் கலைந்தன.....

பண்பாடு,முன்னேற்றம் எல்லாமே
உறவுகள் நிறைந்த வீடுகளில் விளைவதம்மா...

முகங்களைத்தொலைத்ததனால்
முகநூலில் நட்பின் தேடல்.

காம்பவுண்டு வீடுகளில் வளர்ந்துவிட்ட  கண்மணியே...
காலம் சரியில்லை கவனமென்றேன்...

சிரிக்கிறாள் சின்னவள்.
------------------------------ 
இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ இன் ஐந்து வகைகளில் வகை-4 புதுக்கவிதைப் போட்டிக்காகவே (முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை) எழுதப்பட்டது. இது என் சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் எங்கும் வெளியிடப்படவில்லை என்றும் இப்போட்டிக்கான முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடப்படமாட்டாது என்றும் உறுதி கூறுகின்றேன்.

27 கருத்துகள்:

  1. அய்யா வணக்கம்.
    கவிதைக்கு அளவு சொல்லக் கூடாதுதான் ஆனால், ஏதாவது ஒரு கட்டுக்குள் வைக்கணும் என்றுதான் 25வரி என்று சொன்னோம்... முடியுமானால் நீங்களே எடிட் செய்து மறுபடி ஏற்றினால் நல்லது (விதிமீறல் என்று மதிப்பெண் குறையலாம்)

    பதிலளிநீக்கு
  2. ஆஹா கண்முன் காட்சி விரிகின்றது...வெற்றி பெற வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. முகங்களைத்தொலைத்ததனால் முகநூலில்
    நட்பின் தேடல்.

    அருமை
    உண்மை
    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் ..

    பதிலளிநீக்கு
  5. முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  6. போட்டியில் முதலிடம் பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. அண்ணா ! வெற்றி பெற்றமைக்கு புதுகை பதிவர் விழாக்குழுவின் சார்பாக வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் சந்திப்பு போட்டியில் வெற்றி பெற்ற உங்களுக்கு எனது மனமார்ந்தவாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. முதலிடம்....வாழ்த்துக்கள்...சின்னவள் சிரிக்கட்டும்..என்றும்

    பதிலளிநீக்கு
  10. முதலிடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. மின்-தமிழ் இலக்கியப்போட்டியில் பங்கு பெற்று பரிசினை வென்ற தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள் சகோ சின்னவளின் சிரிப்பு உங்களுக்கு எப்பொழுதும் வெற்றியைத்தரட்டும்.

    பதிலளிநீக்கு
  13. புதுக்கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்றமைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. அன்புள்ள சகோதரி,

    முதல் பரிசு பெற்றதற்கு என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வெற்றி பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  16. உணர்வுபூர்வமான கவிதை. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  17. வெற்றிபெற்றமைக்கு என் இதயபூர்வமான வழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  18. முதல் பரிசு பெற்றமைக்கு இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. நடுவர்கள் தேர்வு செய்த படைப்பு தகுதியானது தான் என்பதை, பரிசுபெற்றதை அறியாமலே, நமது விழாவில் பேசிய துணைவேந்தர் அந்தக் கவிதையைப் பாராட்டிப் பேசியதும் எழுந்த கைத்தட்டல்தான். வெற்றிக்கிரீடத்தை மண்டைக்குள் ஏறவிடாமல், மனசுக்குள் வைத்து தொடர்ந்து எழுதி, சாதனை படைக்க வாழ்த்துகள் செல்வா!

    பதிலளிநீக்கு
  20. மேலும் மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  21. அருமை! எளிமையான, வலிமையான வார்த்தைகளின் பிரவாகம்! நீங்கள் பெற்ற பரிசு....நியாயமானதுதான்! வாழ்த்துகள்! மகிழ்ச்சி!!! அன்புடன் ரவிஜி @ மாயவரத்தான் எம்ஜிஆர்

    பதிலளிநீக்கு
  22. மிகச் சிறிய வயதில் சூர்யாவை தூக்கி வைத்துக் கொள்வோம்...அழகான என் மருமகள்.அவள் எப்போதும் சிரிக்கட்டும்..முதல் பரிசு?????பலே!!!!பலே!!!!

    பதிலளிநீக்கு