வியாழன், 14 ஏப்ரல், 2016

ஒற்றைக்கேள்வி..

வாக்களிக்கப்
போகிறேன்

மிகுந்த
யோசனையுடன்
எடுத்த
முடிவு
ஒற்றைக்கேள்வியில்
நிற்கிறது.

முன்னால்
நான்
வாக்களித்தவர்கள்.
வந்ததேயில்லை
மீண்டும்
எங்கள் வீதியில்.

வீட்டை விற்று
வென்றார்கள்.
பங்களாக்கள்
பல உண்டு
இப்போது.

சாதியினர்
அதிகமென்று..
வாய்ப்பு வாங்கி
வென்றவர்,
கட்சியை
மாற்றி
மீண்டுமொருமுறை
நின்றார்.

செத்தவர்
பட்டியல்

உறவின்முறை
விவரங்கள்..

உள்ளூர்
எதிர்ப்பாளர்கள்..

அடுத்தகட்சியில்
அன்பாய்
இருப்பவர்கள்.

செலவுக்கு
எவ்வளவு..

யார்
காலில்
விழவேண்டும்.

உண்மையிலேயா
இவர்கள்
கூட்டணி தானா.

எவரோ 
ஒருவர்
வெல்லப்போகும்
போட்டியில்
எல்லாரும்
சிந்திக்கிறார்கள்.

அப்படியொன்றும்
நல்லபெயர்
ஒன்றுமில்லை
நாட்டுக்குள்
இவர்களுக்கு.

நல்லது
செய்வார்
என்ற
நம்பிக்கையும்
எவர்க்குமில்லை..

இருந்தும்,
அத்தனை
கர்வமாய்..
ஆர்வமாய்.

களமாடும்
இவர்களை
கவுரவிக்கத்தான்
வேண்டும்
வாக்களித்து.

யாருக்கு
என்பது தான்
அந்த
ஒற்றைக்கேள்வி.






















9 கருத்துகள்:

  1. சாதி, மதம், இனம், மொழி என்னும் போதை தலைக்கு ஏறாமல் தெளிவானப் பார்வையில் நிற்பவரின் தகுதியை பார்த்தால் மட்டுமே போதும்! பொதுவாக தமிழன் உணர்சிகளுக்கு அடிமையானவன் அதனால் அறிவோடு எதையும் அணுக முடியாது அதை சரியாக புரிந்து கொண்ட அரசியல் வாதிகள் இதுவரையும் போதையிலேத் தானே வைத்து இருக்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
  2. அரசியல்
    கொள்கைகள் அற்ற ஒன்றாக மாறிப்போய்விட்டதே

    பதிலளிநீக்கு
  3. யாருக்கு என்ற அதே கேள்விதான் தொக்கி நிற்கின்றது செல்வா.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ஆம்... தேர்தல் தலைவலி வாக்காளருக்கு வந்து விட்டது. அதே பழைய தேர்தல் முறை! மாற்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. நாட்டுக்கு நல்லது செய்ய போட்டி போட்டு
    அவர்கள் மானத்தை அவர்களே கப்பலேற்றுகிறார்கள்...
    அப்படி இருக்கும்போது யாருக்கு அந்த ஒற்றைக்கேள்வி...

    பதிலளிநீக்கு
  6. இதைதான் மில்லியன் டாலர் கொஸ்டீன் என்பார்கள் :)

    பதிலளிநீக்கு
  7. இந்த முறை யாரிடம் நாம் கைதிகளாக போகிறோமோ..??

    பதிலளிநீக்கு
  8. ஒற்றைக் கேள்வியில்
    அருமையான தகவல்
    வாக்காளர் கையில்
    ஒளிமயமான எதிர்காலம்!

    பதிலளிநீக்கு
  9. நோட்டு வாங்காமல் நோட்டோவுக்கு போடலாமே கவிஞரே....

    பதிலளிநீக்கு