புதன், 20 செப்டம்பர், 2017

அன்பின் சக்தி...

அன்பின் மகளே
அன்பின் மகளே..

தப்பிப் பிறந்த
தேவதை நீயே...

அம்மையும்
அப்பனும்
கருவிகள்
மட்டும்...

சேயெனப்பிறந்து
தாயெனச்
சிறந்தவள்..

வான் மகள் நீயே..
எமை
காத்திடுவாயே..

கருவறை
வளர்ந்த
கண்ணின் மணியே...
என்
இல்லத்தில்
பூத்த
புதுமலர் தாயே...

சிறுகை அளாவிய
அன்னம்
இனிக்கும்...
உன்னைத்
தூக்கிச் சுமந்ததால்
நெஞ்சம்
குதிக்கும்.

அம்பாரி
வேளையில்
யானையாய்
தவழ்ந்தேன்...
அப்பா
என்கையில்
மறுபடிப்
பிறந்தேன்...

உன்
சிறுநடை
வேளையில்
நான்
களிநடம்
புரிந்தேன்...
உன்
சிற்றாடை
அசைய
நான்
சில்லெனப்
பூத்தேன்..

பெற்றவர்க்கே
நீ
பெற்றவள்
ஆனாய்...
பற்றில்லா
வாழ்வின்
உற்றவள்
ஆனாய்..

அம்மையே..
தாயே...
அருமைப்
பிள்ளையே..

பிறந்த நாள்
உனக்கு..

பேருவகை
எந்தனுக்கு..

வாழ்த்துகள்
எப்படி
வாசித்து முடிக்க...

யாசித்துக்கிடப்பேன்..

நீடு
வாழ்ந்து
நீ
சிறக்க..

12 கருத்துகள்:

 1. தங்களின் அன்பு மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. அன்பின் சக்தி க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. சக்தி க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. அன்பின் மகளுக்கு அற்புத வாழ்த்து
  அழகாய் சொன்ன அன்புத் தோழனே
  வேண்டுதல் படியே சிறப்பாள் மகளும்
  வாழ்த்துகள் கோடி வாழ்க வாழ்கவே

  பதிலளிநீக்கு
 5. அருமை மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் !

  தங்கள் மகள் சக்திக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் வாழ்க நூறாண்டு வாழட்டும் தலைமுறை

  பதிலளிநீக்கு
 7. தமிழ்மணம் வாக்கு சேர்க்கப்பட்டது நன்றி

  பதிலளிநீக்கு
 8. உங்கள் அன்பு மகளுக்கு எங்கள் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 9. அன்பின் சக்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...!

  பதிலளிநீக்கு