வியாழன், 14 செப்டம்பர், 2017

பொறுத்தருள்க...

அழகே..அழகே
அத்தனை அழகே...
சித்தனை
பித்தனாய்
ஆக்கிவிட்டு
எத்தனை
சிரிப்படி
உன் அழகு...

***
கற்பனை கற்பனை என்றிருந்தேன்...
விற்பனை ஆனது
என் இதயம்...
***

கல்லெனென
கல்லென
நானிருந்தேன்...
சிற்பமாய் வந்து
உறைந்து விட்டாய்...
***
ஒரு
அஞ்சறைப்
பெட்டிக்குள்
அடைந்திருந்தேன்..
நெஞ்சறைக்குள்ளே
சிறை வைத்தாய்
***
கண்களை மூடி
நான் கிடந்தேன்..
கனவுகளாய் வந்து நிறைந்துவிட்டாய்
***
புண்களின்
நாற்றத்தில்
விழுந்திருந்தேன்...
புனுகென ஏனடி
பூசி நின்றாய்..
***
இரவுக்குள்
நான் மட்டும்
மாட்டிக்கிடந்தேன்...
உறவென நீயடி காட்டிக்கொடுத்தாய்...
***
நிலவெனில்
வெளிச்சமே
இத்தனை நாட்களில்...

நீயென்றறிகிறேன்
உன் வெளிச்சத்தில்
குளிக்கிறேன்.
***
நீயள்ளி நிதம் தர
முத்தங்கள்
புசித்தேன்...
கள்ளி...
உனக்கே
என் கவிதைகள்
சமைத்தேன்...
***
புல்லின் மீதொரு
பனித்துளி நானடி...
பூக்களின்
இதழ்களில்
புதுநிறம் நானடி...  
***
சொல்லின்
ஒவ்வொரு
புள்ளியும் நீயடி...
என்
சொல்லாக்
கவிதைக்கும்
நாயகி நீயடி...

6 கருத்துகள்:

  1. ஓகோ... செல்லம்மாவோ கண்ணம்மாவோ கவிதை நல்லாருக்கு வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  2. அடடா! அடடா!! ஒவ்வொரு பத்தியும் தனித்தனிக் கவிதையா அல்லது ஒரே கவிதையா என்ற போட்டியில் காதல் ரசத்தைக் கொட்டுகிறது.கொடுத்து வைத்தவர் தான்( கற்பனையென்றாலும்..)அந்தச் சொல்லாக் கவிதைக்கும் நாயகி....அருமை அருமை.

    பதிலளிநீக்கு