வெள்ளி, 15 செப்டம்பர், 2017

சொல்லிடாதீங்க...

விட்டவளை
தள்ளி நின்றேன்

தொட்டென்னை
இழுக்கின்றாள்..

பட்டென
வெறுப்பு சொல்லி
சிட்டெனெப்
பறந்தாலும்
திட்டுவாளோ
சீமைச் சிறுக்கி.?

உதட்டோடு
உறவாடி
உள்ளமெங்கும்
உறைந்து
விட்டாள்..

காசுக்கு
வந்தவள்
தானென்றாலும்..
லேசில்லை
அவள் பாசம்..
தன்னை
அழித்திடுவாள்..
தானென்ற
அகங்காரம்
ஏதுமின்றி
கரைந்திடுவாள்..

ஏசி என்னை
யார் இகழ்ந்தாலும்..
என்
இதழணைத்து
அமைதி
செய்வாள்..

சிக்கென்ற
வெள்ளை மேனி..
சிரிக்கின்ற
அழகு ராணி..

பொக்கென
என்
உயிர்வாங்க
வெகு காலம்
தவமிருந்தாள்..

இருமி
நான்
குலைந்தாலும்..
இனிய வாய்
கசந்தாலும்
இழுத்துச்
சுவைத்தவளை
இதயத்தில்
சுமந்தவளை..

எப்படியோ
தொலைத்துவிட்டேன்..
இருக்குமிடம்
தேடவில்லை..

செல்லும்வழி
எங்கேனும்
அவள்
பார்த்தால்
என்னை
காணவில்லை
என்றுரைப்பீர்.

சிரித்திடுவாள்
சிக்காதீர்..
சீக்ரெட்
ஏதுமில்லை
சிகரெட்
அவள் பெயர்..



































10 கருத்துகள்:

  1. காமுகன் என கடிந்தேன்;
    ஐயோ ... ! 😨
    இது காலனின் கடுதாசி😂

    பதிலளிநீக்கு
  2. அருமை. கடைசி வார்த்தையில் விடை. விடை நமக்கு கடைசியில்தான் தெரிகிறது, விடைபெறும் நேரம் என்பதாலோ!! இருமி நான் குலைந்தாலும் வரிக் கன்னியில் சந்தேகம் வந்தது.

    பதிலளிநீக்கு
  3. தொலைந்தே போகட்டும்.மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  4. இது தான் உங்களிடம் நாங்கள் ரசிக்கும் திறமை. "ஒரு காதலனும் இவ்வளவு காதலாகிக் கசிந்துருகி தன் காதலியை ஊரறிய விவரிக்கமாட்டானே...பின் எப்படி??? ஓகோ கற்பனைக்காதலி தான் இந்த வரிகளை எழுதும் துணிவு தந்தாளோ" என்றெல்லாம் மனது புகைத்துக்கொண்டிருந்த போது சீக்ரெட் இல்லை சிகரெட் சீமைச்சிருக்கி எனத் தெரிந்து மனப்புகை காணாமல் போனது. புகைபிடிப்பவர்களின் முதல் காதலி சிகரெட் தானோ? அருமை. அருமை. வாழ்த்துக்கள்...அவளைத் தொலைத்ததற்கும், இனிமேல் தேடாமல் வாழப்போவதற்கும்.👌

    பதிலளிநீக்கு
  5. தொலைந்ததற்கு மகிழ்ந்து
    இனி தேடாமல் வாழுங்கள் நண்பரே
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. நாமெல்லாம் கிருஷ்ணர்கள்

    அவனிடம் நாதம் வந்தது....

    பதிலளிநீக்கு
  7. நாமெல்லாம் கிருஷ்ணர்கள்

    அவனிடம் நாதம் வந்தது....

    பதிலளிநீக்கு
  8. உயிர் பறிக்கும் காலன் என்று தெரிந்தும் விலை கொடுக்கிறோம் உயிரிழக்க. அழகிய கவிதை .

    பதிலளிநீக்கு
  9. கவிதையின் சீக்ரெட் கடைசியில் சிகரெட் என்பது ஒரு பக்கக் கதையின் வியப்பூட்டும் திருப்பு முனை. கவிதை அழகு!

    பதிலளிநீக்கு