திங்கள், 16 ஜனவரி, 2017

அந்த வீர உரையை...நீங்கள் கேட்டிருக்கவேண்டும்."நீங்களும் சிறப்பு விருந்தினர்..அவசியம் வந்துடனும்"
"அவரும் வருகிறார்".கூகுளாத்தாவை அலசி அரிசி களைவதுபோல் செய்திகளை சேகரிக்க ஆரம்பித்தேன்.

தமிழ் வாழ்த்து,ஊர் வாழ்த்து,பொங்கல் வாழ்த்து என அடுக்கி அழகாக எழுதிவிட்டேன்.

நான்கு நாள்கள் தூங்கும் போது,நடக்கும்போது,வண்டியில் போகும்போது..உருண்டு புரண்டு ..யோகாவெல்லாம் செய்து தயாரித்தாயிற்று.

சின்னவள் " ஐ ஹேட் யூ" என அனுப்பிய செய்தியையும் தாண்டி விழாவுக்கு ரெடியாகிவிட்டேன்.

கூடப் பேசப்போகிறவர்..பேச்சு உலகில் பழம்..கொட்டை..தோல் எல்லாவற்றையும் ஜூஸ் போட்டு குடித்தவர்.

இடையில் குழப்பம் வேறு..நான் இவ்வளவு தயார் செய்து பேசினால் பின்னால் பேசவரும் அவருக்கு பிரஷர் கொடுத்ததாகாதா?
ஆகா..நல்ல மனுஷனாச்சே..நம்மை தவறாக நினைத்துக்கொள்ள மாட்டாரா?...

தலைசீவும் கண்ணாடி,பாத்ரூம் கண்ணாடி முன்னாடியெல்லாம் பேசிப்பழகிவிட்டேன்.

மாலை ஆறுமணிக்கு நிகழ்ச்சி என்றார்கள்.
நாலுமணிக்கே அமைப்பாளருக்கு போன் செய்து நல்லாயிருக்கீங்களா என்றேன்.
என் அவசரமும் ஆவலாதியும் புரிந்துகொண்டாரென நினைக்கிறேன்.கொஞ்சம் சீக்கிரமாகவே வந்துவிடுங்கள் எனச்சொன்னார்.

என்னோடு பேசவேண்டிய அவரை நான்குமுறை அழைத்தும் அவர் அசரவே இல்லை..ஐந்தாம் முறையாக அடித்ததும் மெல்ல போனை எடுத்து "ஆறரை மணிக்கு போகலாம்யா"
எனச்சொல்லி அமைதியாகிவிட்டார்.

நான் குறிப்புகளை எல்லாம் அலைபேசியில் பதிவு செய்திருக்கிறேன்.
ஒருவேளை நிகழ்ச்சிக்கு நிருபர்கள் வந்து என் உரையை கேட்கும்போது பரவசத்தில் குறிப்பெடுக்க மறந்து விட்டால் என்ன செய்வது?
தட்டச்சு செய்து கொடுத்துவிடலாமா என்றால் நேரம் கிடையாது..மனசு கிடந்து பறக்கிறது.

ஒருவழியாக ஆறரைமணிக்கு வண்டி கிளம்பிவிட்டது.இடையில் இரண்டுமுறை அமைப்பாளர் அழைத்துவிட்டார்.
அழைக்கட்டும்..அழைக்கட்டும்..
சிறப்புப் பேச்சாளர் என்றால் அப்படித்தானே..
காத்திருக்கட்டும் .காத்திருக்கட்டும்.

நகரிலிருந்து கொஞ்சம் தள்ளிய இடம்.
மெயின்ரோட்டிலிருந்து அமைப்பாளர் காத்திருந்து பாதுகாப்பாய் அழைத்துப் போனார்.
திடுமென வண்டி ஒரு மணற்பாதைக்கு திரும்புகிறது.
சுற்றிலும் சீமைக்கருவேலம் மரங்கள் அடர்ந்த பாதை.

அரைகிலோ மீட்டரில் பெண் ஒருவர் நாட்டுப்புறப்பாடலொன்று பாடிக்கொண்டிருப்பது...எனக்கு பள்ளியில் படித்த வோர்ட்ஸ்வொர்த்தின் த சாலிட்டரி ரீப்பர் என்னும் ஆங்கிலப்பாடல் நினைவுக்கு வரும் அளவில் இலக்கிய அலையில் நனைந்து போயிருந்தேன்.

மொத்தமாக மூன்றே டியூப்லைட்டுகள் கட்டிய மேடையும் மைதானமும் தெரிகிறது.

"நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சிறப்புப் பேச்சாளர்கள் வந்துவிட்டபடியால்,ஆங்காங்கே இருக்கும் பெரியோர்களும் தாய்மார்களும் மேடைக்கு அருகில் வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்"

மொத்தமாக பத்து தென்னங்கீற்றுகள் கொண்டு அமைக்கப்பட்ட சமதள மேடை.
அதற்குள் கிடந்த பத்து சேர்களில் மூன்று பெரியவர்களோடு இருக்கைக்கு இருவரென சின்னப்பிள்ளைகள் உட்கார்ந்து இருந்தார்கள்.
அமைப்பாளர் கெஞ்சியும் மிரட்டியும் இருக்கைகளை பிடுங்கிக் கொடுத்தார்கள்.

மேடைக்கு முன்னால் பார்க்கிறேன்..
மூன்று வயதிலிருந்து பத்துவயதுக்குள் இருக்கும் நூறுபேர் கொண்ட பார்வையாளர்கள் சம்மணம் போட்டு அமர்ந்து அவர்களுக்குள் பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

அமைப்பாளர் அறிமுகப்படுத்துகிறார்.
"இன்னார் ..நல்லவர்..வல்லவர்..பெரிய கவிஞர்..ரொம்பவும் அறிவாளி..பரபரப்பான வேலைக்கிடையில் வந்ததே பெரிது..இப்போது சிறப்புரை ஆற்றுவார்"

கால்களில் சின்ன நடுக்கத்துடன் மைக்கைப் பிடிக்கிறேன். 
லைட்டா சுடுது.
அலைபேசி எடுத்து குறிப்புகளை தேடுகிறேன்.
திரையிலோ...கண்களிலோ பூச்சி பறக்கிறது.
தமிழாவது ..தாயாவது...
அனைவருக்கும் வணக்கம்.
தொண்டைக்குழிக்குள்  வந்து முட்டும் வார்த்தைகள் வெளியே வர மறுக்கிறது.

"எனக்குப்பின்னே நல்ல உரை ஒன்று இருப்பதாலும்,நேரத்தின் அருமை கருதியும் என் உரையை முடித்துக்கொள்கிறேன்.நன்றி ..வணக்கம்"

மொத்தமாய் ஒன்னேமுக்கால் நிமிடம் நிகழ்ந்த அந்த வரலாற்றுப் பேருரை இப்படியாக முடிந்தது.

பிள்ளைகள் அப்படியொரு உற்சாகமாக கைதட்டி ஆர்ப்பரித்தார்கள்.

அடுத்து அவர் பேச ஆரம்பித்தார்.
எடுத்த உடன் பாட்டு..
கூட்டம் மகுடிக்கு மயங்கிவிட்டது.
பிள்ளைகளோடு பிள்ளையாய் தரையில் உட்கார்ந்து மணலில் கையை வைத்து அலைந்துகொண்டுதான் பேசவில்லை. ஒரு கட்டத்தில் பிள்ளைகளும் இவரும் பிரிக்கமுடியாத அளவுக்கு இணைந்துவிட்டார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் இறந்த ஒரு முதிய பெண்மணிக்காக உலகமே அழுததே அது யார் என்றார்..
ஒரு பையன் கையை தூக்கி ஜெயலலிதா என்கிறான்.சிரித்துக்கொண்டே இல்லை என்கிறார்.
பின்னாலிலிருந்து ஒரு பையன் ஒளிந்துகொண்டு மனோரமா என்கிறான்.
நான் உயிரை கையில் பிடித்துக் கொண்டு எப்போதும் ஓடுவதற்கு ஏதுவான நிலையில் இருக்கிறேன்.அவரோ மிக இலகுவாக மேடையை ஆண்டு முடிக்கிறார்.

பரிசளிக்கிறோம்.
எனக்கொரு துண்டு போர்த்தி ஷீல்டு தருகிறார்கள்..
ஷீல்டில் பெயர் இருக்கிறது...துண்டை ஒரு சிறுமிக்கு அணிவித்து விடுகிறேன்..
ஊழியத்துக்கு மேலான ஊதியம் ..உடம்புக்குக் கேடு.

வண்டி வரை வந்து வழியனுப்பிய ஒரு சிறுவனிடம் கேட்கிறேன்..
" என் பேச்சு பிடித்ததா..அவ்வளவு சத்தமா கை தட்டினியே" என்றேன்...
" இல்ல சார்..போட்டியெல்லாம் நாலுமணிக்கே முடிஞ்சுடுச்சு..
பரிசுக்காகத்தான் காத்திருந்தேன்...நீங்க ரொம்ப சீக்கிரமா முடிச்சுட்டீங்கல்ல...அதுக்குத்தான்"


இந்த ஆண்டு போகட்டும்..
காத்திருங்கள் கண்மணிகளே..
அடுத்த வருடம் நீங்கள் அசந்துபோகும் அளவுக்கு பேருரை ஒன்று தயாரித்து வந்து உங்களிடம் முழங்குகிறேன்..
கவலைப்படாதீர்கள்..

ஆனால்..இரவிலிருந்து இதை எழுதும் இந்த நேரம்வரை எனக்கொரு கவலை வருகிறது..

வேறொன்றுமில்லை..

அந்த அமைப்பாளர்..
அடுத்தமுறை என்னை அழைப்பாரா?...24 கருத்துகள்:

 1. கட்டாயம் கூப்பிடவார். இப்படி ஒரு பேச்சாளர் கிடைப்பாரா

  பதிலளிநீக்கு
 2. வித்தியாசமான அனுபவம்தான் நண்பரே
  தங்களின் தன்னடக்கமும் பளிச்சென்று தெரிகிறது
  ஒரு புதிய பேச்சாளர் உருவாகிக் கொண்டிருக்கிறார்
  வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. நகைச்சுவையாகப் பேசுவதைவிட எழுதுவதுதான் கடினம்!
  நீங்கள் இரண்டாவதில் அட்டகாசமான சிக்ஸர் அடித்து அசத்திவிட்டீர்கள்... முதலாவது வெற்றி, அருகில்தான் இருக்கிறது. முயல்வீர், அதிலும் வெல்வீர்! வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 5. கண்டிப்பாக அழைக்கபடுவீர்...

  நான் உயிரை கையில் பிடித்துக் கொண்டு எப்போதும் ஓடுவதற்கு ஏதுவான நிலையில் இருக்கிறேன்.அவரோ மிக இலகுவாக மேடையை ஆண்டு முடிக்கிறார்.

  ஊழியத்துக்கு மேலான ஊதியம் ..உடம்புக்குக் கேடு

  பதிலளிநீக்கு
 6. ஹஹஹ்ஹஹஹ் செம செல்வா!!! சிரிச்சு முடில...தப்பா எடுத்துக்கிடாதீங்க..நீங்க சொன்ன விதம்...அது போகட்டும் உங்கள் உரையைப் பற்றிச் சொல்லவே இல்லையே....ரசித்த பதிவு. பேச்சு என்பது ஒரு கலை. நீங்கள் வெல்வீர்கள். அடுத்த முறை அமைப்பாளரின் அழைப்பு வரும் பாருங்கள்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்துகள் ஐயா.மேலும் பல மேடைகளில் பலரின் சிந்தனை எல்லையை அடைய வாழ்த்துகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 8. நல்ல அனுபவம்! :) உங்கள் நகைச்சுவையை ரசித்தேன்....

  வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 9. ஆண்ட்ராய்டு மொபைல் மூலமாக உங்களது லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரை கண்ட்ரோல் செய்வது எப்படி ?

  https://www.youtube.com/watch?v=IP3c11mDBCc

  பதிலளிநீக்கு
 10. How To use Hangout Video calls free

  Google Hangout பயன்படுத்துவது எப்படி ?

  https://www.youtube.com/watch?v=aor8wBEWypc

  பதிலளிநீக்கு
 11. வீட்டில் இருந்து கொண்டு ஆபிஸில் உள்ள கம்ப்யூட்டரை பயன்படுத்துவது எப்படி ?

  https://www.youtube.com/watch?v=kRQRe6NTD84

  பதிலளிநீக்கு
 12. அந்த காலம் முதல் இன்று வரை நமக்கு பிடித்த பாடல்களை ஆண்ட்ராய்டு மொபைலில் டவுன்லோட் செய்வது எப்படி ?


  https://www.youtube.com/watch?v=0lgJhG36peg

  பதிலளிநீக்கு
 13. இனி அனைத்து சோசியல் மீடியாக்களையும் ஒரே ANDROID APP-ல் பயன்படுத்தலாம் எப்படி?

  https://www.youtube.com/watch?v=cwuKJ_Tcq-o

  பதிலளிநீக்கு
 14. தேவையற்ற Android APPS யூஸ் செய்யாமல் தவிர்ப்பது எப்படி?

  https://www.youtube.com/watch?v=pNxwUFvzUkU

  பதிலளிநீக்கு
 15. Facebook-ல் தேவையில்லாத விளம்பரங்களை வராமல் தடுப்பது எப்படி?

  https://www.youtube.com/watch?v=w_3MUp-bkjM

  பதிலளிநீக்கு
 16. நமது Facebook Account மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது எப்படி ?

  https://www.youtube.com/watch?v=FDCGRfzuQgw

  பதிலளிநீக்கு
 17. வாட்சப்பில் தமிழில் மெசேஜ் அனுப்புவது எப்படி ?
  https://www.youtube.com/watch?v=pSNKJn9G-FA

  பதிலளிநீக்கு
 18. ஒரு App Download செய்து 10 மேற்பட்ட App-களை பயன்படுத்துவது எப்படி ?

  https://www.youtube.com/watch?v=oaQUWzIbZpo

  பதிலளிநீக்கு