செவ்வாய், 3 ஜனவரி, 2017

உயிரிருந்தும்...

அன்பின் சக்திக்கு,

புத்தாண்டு வாழ்த்துகள்.
வாழ்த்துகள் யாவும் இங்கே சம்பிரதாயத்துக்குத்தான்.

அரசியல்,ஊடகம்,வலைத்தளம் யாவும் வியாபாரமென்னும் வலைக்குள் மூழ்கிப்போன நாள்களில் வாழ்த்தாவது...மண்ணாவது..
சமீபத்திய நிகழ்வுகளில் நான் திளைத்து ஒரு நீண்ட மடல் எழுதத்தான் நினைக்கிறேன்..
என்னை புலம்பமட்டுமே படைக்கப்பட்டவனாய் நீ நினைத்துவிடக்கூடாதென்பதால் மேலோட்டமாக விட்டுவிடுகிறேன்..
உன் பின்னூட்டங்கள் அதை தொடரச் சொல்வாயெனில் ஒவ்வொன்றையும் பற்றி ஆழமாய்ப் பார்க்கலாம்...

அரசியல் என்பதில் வாக்குப் போட்டவுடன் வாக்காளனின் கடமை முடிந்து போனதாகவே இருக்கிறது இப்பவும்..

கண்ணுக்கு முன்னே நடக்கும் எல்லா நாடகங்களையும்,பார்வையாளனாக மட்டும் பார்த்துவிட்டு பக்கத்திலிருப்பவருடன் பகிர்தலோடு முடிந்துவிடுகிறது..
ஆயிரம் கேள்விகள்,நம்பமுடியாத அளவில் திருப்பங்கள் கையாளாகாத நிலையில் நாம் மட்டுமல்ல..பெரும்பாலும்..

ஒரு மாநிலத்தின் முன்னால் முதல்வரின் மரணத்தில் இத்தனை மர்மங்களா இருக்க முடியும்..
காலியான திண்ணைக்கு எத்தனை போட்டிகள்..
இந்த நாட்டை நடிகர்களிடம் தோற்றோம்...அல்லது நடிப்பவர்களிடம் தோற்கிறோம்..

செய்தி ஊடகங்கள்..
பச்சை விபச்சாரம் செய்யும் அவலம்..

மாநில முதலமைச்சரை கூஜா தூக்குகிறார் என பட்டவர்த்தனமாக போடுகிறார்கள்..

ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் பாதுகாப்போடு வாழ்ந்துகொண்டிருப்பதாக நாம் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறோம்.

நம்மைத் தீண்டாதவரை கருத்துகள் சொல்லி கடந்துபோகிறோம்.

சக்தி..
நிர்ணயிக்கப்பட்ட ஒரு சூதுக்கூட்டத்தில் நாம் செம்மறியாட்டு மந்தைகள்..
நம் கனைப்பும் வீராப்பும் நம் மந்தைக்குள் தான்..

போராட்டகுணங்களை திட்டமிட்டு சீரழித்து ரொம்ப நாள்கள் ஆகிவிட்டது..
மதுக்கடைகளும்,மலிவான வலைத்தளங்களும் கட்டுப்படுத்த முடியாதவை அல்ல...
அவை அரசியல் சார்ந்த சமூகக் கொள்ளைகள்..

பணம் வருமா எனக்காத்திருந்து முகநூலில் படத்துடன் செய்தி போட்டு சிரிக்க வைத்துவிட்டு எடுத்த நோட்டுடன் நகரும் அளவில் தான் இருக்கிறது வீரம்...

எங்கே தொலைந்து போனது போராட்ட குணங்கள்?

நடுநிலை மந்திரவாதிகள்..ஜனநாயக தூண்கள்..

தேர்தல் ஆணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாம்...நாமும் நம்புகிறோம்..
ஆளும் கட்சிக்கு ஆதரவில்லாத ஒரு தேதியைக்கூட அறிவிக்க முடியாது அதனால்..

லஞ்ச ஒழிப்புத்துறை..
மிக வேகமாக கருப்புப்பணத்தை கண்டுபிடிக்க களமிறங்கியது..
இப்போது என்ன செய்கிறது?
ஒருவேளை கருப்புப்பணம் முழுவதையும் கண்டுபிடித்து முடித்துவிட்டதா?
இல்லை யாரிடம் பணம் இருக்கிறது எனத் தெரியாதா?

சக்தி..
செய்திகளில்,தீர்ப்புகளில்,ஒவ்வொன்றிலும் அரசியல் பின்னிக்கிடக்கிறது..
நாம் பிரேக்கிங் செய்திகளில் பதட்டமடைந்து போகிறோம்.
செயலூக்கம் உள்ள தகுதி உள்ளது தப்பிப் பிழைக்கிறது..பல நக்கிப்பிழைக்கிறது..

இது நமக்கான தேசமில்லை..நாம் விரும்பும் தேசமாகவுமில்லை..

தொடர்கதை போல நாளுக்கு பல விவசாயி செத்து மடிகிறான்..
அமைச்சர் மொட்டையடித்துக்கொள்கிறார்..

நாளுக்கொரு பெட்ரோல் விலையேற்றம்..
படகுகளை விடச்சொல்லி இன்னும் கடிதம் எழுதும் கலாச்சாரம்..
சண்டை முடியட்டும் என காத்துக்கிடக்கும் எதிர் துருவங்கள்..
சேறும் மணலும் அரித்துக்கிடக்கும் கால்வாய்களை சரிசெய்து வைத்தாலே நீருக்கு பிரச்சனையில்லாத வளமிக்க நாடு தான்..
செல்லரித்துக் கிடக்கும் இதயங்களை என்ன செய்ய..
வலது சாரி..இடது சாரி பற்றிப் பேச எதுவே இல்லை..சாரி...

அரசியல்,நாளேடுகள்..
நீதிமன்றங்கள்,யாவும் அவர்களுக்காக இயங்கும் மற்றொரு உறுப்புகள் தான்...

ஆயிரத்தெட்டு பிரச்சனைகளை தானாகவே எடுத்து நடத்தும் நீதிமன்றங்கள் ஒரு நீதிபதிக்கே சந்தேகம் வரும் போது ஏன் நடத்தக்கூடாது?
கேள்விகள் ஆயிரம் வருகிறது சக்தி..
பதில் தான் காணவில்லை..

இனி வரும் காலம் இளைஞர்கள் கைகளில் தான் இருக்கிறது..
தலைவர்களித்தேடிக்கொண்டிருக்காதீர்கள்..
நீங்களே தலைவராகுங்கள்..

சாலையில் ஒரு கல்லையேனும் நகர்த்திப்போடுங்கள்..
சில நாள்களேனும் தொலைகாட்சியை அணைத்துப்பாருங்கள்.
செய்தித்தாள்களை வாங்கிப்படிக்காதீர்கள்.
முகநூலில் கருத்துச்சொல்லாதீர்கள்..
நிறையப்படியுங்கள்.
உங்களுக்குள் விவாதியுங்கள்..
அரக்கப் பறக்க வண்டியோட்டி வீழ ஆங்கிலப் புத்தாண்டு நமக்கல்ல..
அறிவும் சமூகமும் சார்ந்து சிந்தியுங்கள்..
உங்கள் வீட்டில் உள்ளோரையேனும் காசு வாங்கி வாக்களிக்கச்செய்யாதீர்கள்.
தன்னளவில் ஒரு சீமை கருவேல முள் செடியையேனும் பிடுங்கிப்போடுங்கள்...
மற்ற புடுங்கிகளுக்கு அது எவ்வளவோ மேல்..

அன்புடன்..
செல்வக்குமார்.

9 கருத்துகள்:

 1. 👏👏 "அன்பின் சக்திக்கு..." கவிதைக்கடித நூல் தயாகட்டும்! வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. முடிவில் உள்ள ஒரு பத்தி... யப்பா...! உண்மையான கோபம்...

  பதிலளிநீக்கு
 3. தங்களின் ஆதங்கமும் கோபமும் நியாயமானதுதான் நண்பரே

  பதிலளிநீக்கு
 4. சாலையில் ஒரு கல்லையேனும் நகர்த்திப்போடுங்கள்..
  சில நாள்களேனும் தொலைகாட்சியை அணைத்துப்பாருங்கள்.
  செய்தித்தாள்களை வாங்கிப்படிக்காதீர்கள்.
  முகநூலில் கருத்துச்சொல்லாதீர்கள்..
  நிறையப்படியுங்கள்.
  உங்களுக்குள் விவாதியுங்கள்..
  அரக்கப் பறக்க வண்டியோட்டி வீழ ஆங்கிலப் புத்தாண்டு நமக்கல்ல..
  அறிவும் சமூகமும் சார்ந்து சிந்தியுங்கள்..
  உங்கள் வீட்டில் உள்ளோரையேனும் காசு வாங்கி வாக்களிக்கச்செய்யாதீர்கள்.
  தன்னளவில் ஒரு சீமை கருவேல முள் செடியையேனும் பிடுங்கிப்போடுங்கள்...
  மற்ற புடுங்கிகளுக்கு அது எவ்வளவோ மேல்..


  மனதை தொட்டது...

  பதிலளிநீக்கு
 5. ஐயா ரௌத்திரம் தெறிக்கிறது உங்கள் வரிகளில்...

  பதிலளிநீக்கு