வெள்ளி, 20 ஜனவரி, 2017

தழுவுகிறேன்..

கரை என்று
கடக்குமென
கடல் நடுங்கிக் ஒடுங்கியது.
*

விடியல் ஒன்றை
கடல் பார்த்து
வியந்து சிரிக்கிறது..
*
காளைகள்
கருக்கொண்டு
வீரர்கள்
வெளிவந்தார்...
*
கருவுக்கும்
கேட்குமென
கர்ப்பினிகள்
கோஷமிட்டார்.
*
மம்மி டாடி
பிள்ளையெல்லாம்
தமிழ்ப் பாலை
எடுத்துவிட்டார்.
*
குளிர்ந்திருந்த
பானமெல்லாம்
குடுவைக்குள்
வியர்க்க வைத்தார்..
*
பனியடிக்கும்
நீள் கரையில்
திமிரெடுத்த
தமிழ்க்கூட்டம்
திமில் கேட்டு
திரண்டுவிட்டார்.
*
சென்னைத்தமிழ் சேர்ந்து
அன்னைத்தமிழுக்கு
ஐந்தாம்
தமிழ்ச்சங்கம்.
*
கடலன்னை
எத்தனையோ
பார்த்திருப்பாள்..
ஆனந்தக்
கண்ணீரால்
உப்புகொஞ்சம்
சேர்த்திருப்பாள்...
*
கடற்கரைப்
பல்கலைக்கழகம்..
வரலாற்றில்
எப்போதோ திறக்கும்..
புதுப்புது தீக்கள் பறக்கும்..
தீயவை யாவும்
எரிக்கும்.
*
மெரினாக்
கடற்கரையில்
சிலையான
தலைவர்க்கெல்லாம்
உயிர் கொஞ்சம்
வந்திருக்கும்..
சிலையாகா
தலைவர்க்கெல்லாம்
உயிர் கொஞ்சம்
உறைந்திருக்கும்..
*
விலையில்லாப்
பொருளுக்கெல்லாம்
இனி
விலைபோக யோகமில்லை..
கலையாமல்
இருந்துவிட்டால்....
கவலையிலே
தூக்கமில்லை...
*
சென்னைத்
தலைநகரே
நிமிர்த்திக்கொள்...
திசைகள் எட்டே
இனியேனும்
திருந்திக்கொள்..
*
சீரியல் பாவங்களை..
கேமராக்கள்
கொண்டுவந்து
கடற்கரையில்
பாவங்கள் தொலைத்தது
சின்னத்திரை
*
ஒப்பனை முகங்களின்
கற்பனை
கலைத்த
உரத்த குரல்களின்
உப்புக்காற்று..
*
பாலில் அபிஷேகம்
அட்டைக்கு
கிடைக்காது..

பதவிக்கனவுகள்
இனி எப்போதும்
இருக்காது..

வெள்ளிக்கிழமைகள்
படம் வரும்
இடங்களில்...
துள்ளி வருவாரென
துளியேனும்
நினையாதீர்...

மவுன
விரதமின்றி உங்களுக்கு
மாற்றுவழி
ஏதுமில்லை..
*
ஊர்சுற்றும்
பிள்ளையென்று
யார் சொல்வார்.
கூர் பெற்ற
வேலன்றொ
யார் வெல்வார்?
*
நாமெல்லாம்
சேர்ந்ததுதான்
துணை கண்டம்..
இத்தனைநாள்
தெரியார்க்கு
இனி கண்டம்..
*
அன்னியப்
பறவைக்கு
அனுமதி உண்டு...
நீ
பின்னிய வலைகளில்
இனி மாட்டாது சிண்டு..
*
சித்தாந்தம்
இதில் எங்கே
பித்தெடுத்து
தேடாதீர்...
வித்திதுதான்
மரமாகும்..
ஓடாதீர்...
*
இன்றேனும்
முடிப்பாரா?
நாளைக்குள்
கலைவாரோ...

இத்தனை
ஆண்டுகள்
காத்திருந்தோம்..
ஏன்
இந்த
அவசரமோ?
*
இப்போது
தான்
ஆரம்பித்திருக்கிறது.7 கருத்துகள்:

 1. #பாலில் அபிஷேகம்அட்டைக்குகிடைக்காது#
  அடுத்த பட ரீலீஸ் அன்று தெரிந்து விடும் ,முட்டாள்கள் திருந்தி விட்டார்களா ,இல்லையா என்று :)

  பதிலளிநீக்கு
 2. VarAlaaru kanaAdha puratchiyai neengal paadiya vidham andha varalaarum ninaithirukkum. "SilAiyaga thalaivarkellam uyir uraidhu poyirukum" unmai dhan Ayya. EzhunDhadhu Ilaignar padai ini kavalai illai. Super

  பதிலளிநீக்கு
 3. ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கு உதவிய
  தமிழரின் அடையாளத்தையும் பண்பாட்டையும் ஒழுக்கமுடன் உலகிற்கு உறைக்கச் சொன்னவர்களை நாமும் பாராட்டுவோம்.

  பதிலளிநீக்கு