வெள்ளி, 9 மார்ச், 2018

ரசம்...


ஒற்றைத்தக்காளி
ஒரு சட்டி நிரம்பும்
ஆதி நாள்களில்
ரசமென்ற
பெயரில்..

குன்னிய
சேவலொன்று
கொதிக்கையில்
ரசமே
சூப்பென
உருக்கொள்ளும்..

சட்டியோ
பானையோ
நிரம்பாத
சமையல்
அம்மாவுக்கு
தெரியாது..

புழு நீக்கிய
கூறுகளின் காயோ...
பூச்சியடித்து ஒடித்த
மரத்தின் கீரையோ
எண்மரின்
வயிறுகள்
நிரம்பியாக கட்டாயம்.

அகப்பைகளில்
அமைந்த கண்கள்
கரண்டிகளில்
காணக்கிடைப்பதில்லை..

மேசைக்கரண்டிகள்..
சோற்றுக்கும்
கறிக்கும்
குடிமாறிய
குக்கர் யுகத்தில்,

சூடுசெய்த
சிறுகுவளை ரசத்தின்
ஆழத்தில்
தெரிகிறது...

வாழ்க்கைச் சக்கைகள்..













11 கருத்துகள்:

  1. எளிதான அழகான வரிகள்..வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. உணர்வுகளைச் சொல்லும் அழகிய கவிதை. அம்மா வைக்கும் ரசத்தில் தக்காளி இல்லை என்றாலும் கூட பாசம் சுவை கூட்டும்.....

    பதிலளிநீக்கு
  3. தங்கள் பாவரிகளை வாசிக்க
    எங்கள் நாவூறுதே!

    பதிலளிநீக்கு
  4. அம்மாவின் சமையல் பாசம் நிறைந்தது தானே! எளிமையான சொற்கள். அழகான கவிதை. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. ஆம்... அப்போது சாறு.,. இப்போது சக்கை

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு