ஞாயிறு, 22 மே, 2016

எரியுதே....

ஒற்றைச்சிலம்பை
விற்கக்
கொடுத்துவிட்டு..

அப்படியென்ன
ஆவேசம்
அவளுக்கு...

உடைத்துவிற்காமல்
மூடியே
விலைசொன்னது
எப்படி
நல்ல வியாபாரம்?

அவளுக்கும்
கொஞ்சம்
ஆசை
இருந்திருக்கிறது...

அவன்
மீசைக்குள்ளும்
வேசமிருந்திருக்கிறது..

கணக்கு
தப்பானதால்
செத்தவனுக்கு
வாழவும்
தெரியவில்லை...

என்னடா
செஞ்சோம்.

நீங்கள்
வைத்த
தீ
மட்டும்
இன்னும்
எரிகிறது...







11 கருத்துகள்:

  1. சிறப்பான கவிதை. வித்தியாசமான சிந்தனை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. கோபக்கனல் தெறிக்கின்றது அருமை கவிஞரே...

    பதிலளிநீக்கு
  3. இரண்டு சிலம்பையும்
    கொடுத்துவிட்டால் கொடுத்ததற்கான ஆதாரம் ?

    உடைத்துக் கொடுத்தால்
    அது சிலம்பாகுமா ?

    மூடி விற்றது
    நம்பிக்கை வியாபாரம்

    அவளுக்கு நிச்சயமாய்
    ஆசை இல்லை
    வறுமை இருந்திருக்கிறது

    இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்
    ஸ்தாபித மானவைகளைத் தொடுகையில்
    கொஞ்சம் கூடுதல் கவனம் கொள்ளலாம்

    புதுமைப் பித்தனின்
    சாப விமோனம் போல

    பதிலளிநீக்கு
  4. மாறுபட்ட சிந்தனையில் வந்த ஒரு நல்ல கவிதை

    பதிலளிநீக்கு
  5. வித்தியாசமான பொருளில் உங்கள் நடையில் கவிதை வரிகள்...

    பதிலளிநீக்கு
  6. அருமையான கவிதை விதைத்துள்ளீர்...

    பதிலளிநீக்கு
  7. செத்தவனுக்கு வாழ தெரியவில்லை.,.அருமை
    மொத்தத்தில் அவன் வாழ வழி இல்லை

    பதிலளிநீக்கு
  8. செத்தவனுக்கு வாழ தெரியவில்லை.,.அருமை
    மொத்தத்தில் அவன் வாழ வழி இல்லை

    பதிலளிநீக்கு
  9. சிறப்பு சகோ...
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  10. சிறப்பு சகோ...
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு