வியாழன், 23 ஜூன், 2016

ஸ்டிக்கர் கோலம்

ஆறுபுள்ளி
ஆறுவரிசை..
அழகழகாய்
யானைகள்..
நடைபழகும்
நான்கு அன்னங்கள்.
இலையோடு
தலைநிமிர்ந்த
தாமரைகள்..
புத்தாண்டு..
பொங்கல் பானை..
யேசு பிறந்ததற்கும்
உண்டு...

அத்தனை
நேர்த்தியாய்
அலங்கரிப்பாள்
வாசலை..

அட்டைபோட்ட
நோட்டு முழுதும்
அக்காவின்
கோலங்கள்.

கட்டில்
மெத்தையென
சீர் செனத்தி
சாமானோடு
மடியேறிப்
போனது..

சென்றவாரம்
திருவிழா
வந்தவள்..

தேடிப்
பொறுக்குகிறாள்..

வெல்கம்
போட்ட
ஸ்டிக்கர் கோலம்.

9 கருத்துகள்:

  1. அருமை கவிஞரே ரசித்தேன் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. அழகான ஒட்டுப்பொட்டுகள் கூட இப்போது அச்சமூட்டும் பாம்புப் பொட்டுகளாய் மாறிவருவதை என்னென்பது? நல்லதொரு “நஸ்தால்ஜியா” கவிதை!

    பதிலளிநீக்கு
  3. ஆம் செல்வா காலம் மாறிப் போனது!இன்றைய வாழ்வியல்...கவிதையில் அருமை...

    பதிலளிநீக்கு