செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

ஜக்கிக்கு....ஒரு விண்ணப்பம்...

அன்பின் சக்திக்கு,

சமீபத்தில் புதிதாய் சில விதிகள் வந்திருக்கிறதாம்.
அரசு நிர்ணயம் செய்த வயதைத் தாண்டியிருந்தாலும் இருவர் திருமணத்தை பதிவுசெய்ய வேண்டுமெனில் பெற்றோர்கள் ஒப்புதல் வேண்டுமாம்.

அறிவார்ந்த பெரியவர்கள் போடும் சட்டம்...
அதனை அப்புறம் பார்க்கலாம்.

ஆனால் திருமணத்திற்கு விதி செய்யும் அரசு..
துறவறம் எடுப்பதற்கு ஒரு விதியும் செய்யவில்லை என்பதுதான் தலைவிதி.

பங்குனி சித்திரைகளில் ஆலந்துறை தாண்டிய வெள்ளியங்கிரி மலைச்சாரலில் மனிதர்கள் பயணம் செய்யும் காலம்.
ஏழுமுறை அந்த மலைகளில் நான் நடந்திருக்கிறேன்.

வெள்ளை விநாயகர் கோயில்,பீமன் களியுருண்டை,
சீதா வனம்,திருநீற்று மலை,ஆண்டி சுனை ,இன்னுமென கடந்து உச்சியை அடையும்போது செத்து சொர்க்கம் வந்த உணர்விருக்கும்.

அடரிருள்சூழ் மலையில் ஒருபுறம் நட்சத்திரங்களென கொட்டிக்கிடக்கும் கோவையும்,
ஆங்காங்கே ஒன்றென கேரளாவும் காணக்கிடைக்கும்.

காட்டுநெல்லி,மருந்துகளென ஆதிவாசிகளின் சிறுகடைகள் அத்தனை அழகு.

1990 ஐ தாண்டிய நாள்களில் ஆசிரமம் ஒன்று முளைக்க ஆரம்பித்தது.

அதன் ஆரம்ப காலங்களிலிருந்து வதந்திகளோடே வளர்ந்தது.

ஜக்கி மனைவியின் திடீர் மரணம் அவ்வளவு பரபரப்பாய் இருந்தது.

சித்தர்களும்,யோகியரும் வளர்த்த தியானங்களும்,யோகங்களும் புதுவாழ்வு பெற்றதாய் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடினோம்.

இதழ்கள் எல்லாம் நிழல் எழுத்தாளர்கள் இவர்களின் பெயரில் எழுதிக்குவித்தார்கள்.

சக்தி!
யோகம்,தியானம் இவற்றில் நாம் உட்புக வேண்டாம்.

ஆனால் ,அண்மைகளில் ஆசிரமங்கள் பற்றி வரும் செய்திகள் ஆரோக்கியமானதாயில்லை.

படித்த,பணக்கார பெற்றோர்கள் பிரச்சனைகளுக்காக பிள்ளைகளுடன் ஆசிரமம் போக,
பிள்ளைகளைப் பறிகொடுக்கும் பிரச்சனைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

சிவன் திருவிளையாடல் காலத்திலேயே பிட்டுக்கு மண்சுமக்க வீட்டுக்கு ஒருவர் போதும் என்றிருக்கிறார்கள்.

பெற்ற இரு பெண்களையும் மொட்டையாய் பார்க்கும் அவலம் பெற்றோரால் தாங்கக்கூடியதல்ல.

மீண்டும் ஒற்றைப்பெண்ணைப் பெற்றவர்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

ஒரு பெற்றோராய் இதுவே என் வேண்டுகோள்.

அய்யா...ஜக்கி வாசுதேவ் அவர்களே.

உங்கள் தியானம்,யோகா பயிற்சிகளுக்குள் நான் வரவில்லை..

பெற்ற தாயும் தகப்பனும் வெளியே கதறியழ,
அதைத்தாண்டியுமா யோகமும்,தியானமும் செய்துவிட முடியும்.?

மூளைச்சலவை,மனமாற்றுதல்,போதை போன்ற பழக்கங்கள், எது பற்றியும் பேசவில்லை.

வாயையும் வயிற்றையும் கட்டி பெண்ணைப்பெற்று வளர்த்து படிக்க வைப்பதைக்காட்டிலுமா தியானம் பெரிது?

வனங்களை அழித்து கட்டடமாக்கினீர்கள் நல்லது...
குடும்பங்களை அழித்து வனமாக்காதீர்கள்..நல்லதல்ல.

கருவறை தாங்கி பாலூட்டி வளர்த்த தாயின் கண்ணீர் எல்லா ஆயுதங்களிலும் கூரானது.

சட்டங்களும்,அரசுகளும் உங்களுக்கு ஆதரவாய் இருக்கலாம்.

ஜக்கி அவர்களே...
சட்டங்கள் சிவன் செய்ததல்ல..
அரசுகளும் ஆண்டவனுடையதல்ல.

உங்கள் ஆசிரமத்தை எப்படிவேண்டுமானாலும் வளர்த்துவிட்டுப் போங்கள்.
வணங்க வரும் எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்.

இஞ்சினியரிங் சொல்லிக்கொடுத்த எங்கள் பிள்ளைகளின் லட்சணம் எப்படியிருந்தாலும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

தன்னிச்சையான முடிவெடுக்கும் சட்டப்படியான வயதுதான்..
ஒத்துக்கொள்கிறோம்.

ஜக்கி அவர்களே...
இது அமெரிக்கா அல்ல.
இந்தியா..

குடும்பம் என்னும் அமைப்பு இன்னும் சிதையாமலிருப்பது பிள்ளைகள் மேல்கொண்ட பாசத்தால் தான்.

பெற்றோர்களும்,பிள்ளைகளும் ஒப்புக்கொண்டால் மட்டும் உங்கள் சேவைக்கு அனுமதித்து எதை வேண்டுமானாலும் வளருங்கள்.

அன்பான , அறிவான,
ஐ.நா வரை போய் யோகக்கலை வளர்க்கும் ஜக்கி அவர்களே...

பெற்றோர்களின் கதறல் சத்தம் கேட்டுத்தான் இவையெல்லாம் நிகழுமெனில்

மன்னிக்கவும்...
எனக்கு உங்களின் எதிலும் உடன்பாடில்லை.

அன்புடன்.
செல்வக்குமார்.

12 கருத்துகள்:

 1. உண்மை வயத்தெரிச்சலா இருந்தது அந்த பெண்குழந்தைகளைப் பார்க்கும் போது..

  பதிலளிநீக்கு
 2. ''வனங்களை அழித்து கட்டடமாக்கினீர்கள் நல்லது...
  குடும்பங்களை அழித்து வனமாக்காதீர்கள்..நல்லதல்ல.''

  உண்மை

  பதிலளிநீக்கு
 3. நடுவுல எங்கள் ஏன் இழுக்கிறீங்க.. அமெரிக்காவில் நாங்க இவங்களோட எவ்வளவோ மேல்.

  பதிலளிநீக்கு
 4. Kavignare, ungal ezhuthil unmaiyai ivvalavu karasaaramaga kotti irukireergal. Unmaiyilum unmai. Idaiyidaiye arumaiyana punch varigal ullaththai ennavo seigiradhu. Petravargalin uzhapai Vida, thiyagathai vida thiyaanam ondrum peridhalla enbaudhai nangu unara seidhu irukireergal. Anal idhai vaasithal indha gurukkaluku Roshamum, kobamum vara...ivargal ondrum maanasthargal alla. Anil ambani, Tata-kkaluku aduthu indha Naatai iyakum periya sakthigalil ivargalum adanguvar. "Ennavo seiyyatum, ooran pillaigalai mattum vittu vidungal" endra ungal varthai engal kadhugalil olikiradhu Meera.Selvakumar ayya avargale.

  பதிலளிநீக்கு
 5. ஜக்கியிடம் இன்னும் எவ்வளவு நாள்தான் கெஞ்சி கொண்டிருப்பீர்கள் பெற்ற பிள்ளையையும் பறி கொடுத்த பின் இன்னும் உங்களிடம் இழப்பதற்கு என்ன இருக்கிறது ஒரு பெற்றோராவது அவரை போட்டு தள்ளிவிட்டு வருங்காலத்தில் மற்ற குழந்தைகளையாவது காப்பாற்ற வழி செய்யலாமே?

  பதிலளிநீக்கு

 6. //அரசு நிர்ணயம் செய்த வயதைத் தாண்டியிருந்தாலும் இருவர் திருமணத்தை பதிவுசெய்ய வேண்டுமெனில் பெற்றோர்கள் ஒப்புதல் வேண்டுமாம்.//
  இப்படி எல்லாம் சட்டம் கொண்டுவந்தால் அமெரிக்கா மாதிரி லீவீங்க் டூகெதர் என்று வாழ ஆரம்பித்துவிடுவோம்

  பதிலளிநீக்கு
 7. Idhu pondra sattangal kalappu thirumanathai thadukkum karuvi. Kalappu Thirumanam ondre saadhi, madha vetrumaiyai ozhikum ayudham. Arasin nokkam ennavendru ipodhu purigiradha?? Enna....thottil kuzhandhai thittam romba subhikshama iyangum appodhu.

  பதிலளிநீக்கு
 8. அருமை செல்வா....நச்சென்று சொல்லிவிட்டீர்கள்

  பதிலளிநீக்கு
 9. RTI act ட்ரஸ்டுகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் கொண்டு வந்தால் அனைத்தும் வெளிச்சமாகிவிடும். செய்வார்களா இல்லை செய்ய விடுவார்களா. இந்த ட்ரஸ்டுகளுக்கு கொடுக்கும் பணம் நன்கொடை என்ற பெயரில் வரிவிலக்கு தரப்படுகிறது. இவர்கள் தங்களுடைய வரவு செலவுக் கணக்கை நன்கொடை அளித்தவர்களுக்குக்கூட காட்டுவதில்லை. ஜக்கியும் இதுக்கு விதிவிலக்கல்ல.
  விஜயன்

  பதிலளிநீக்கு
 10. சுடச் சுடச் சொல்லிப் போனவிதம்
  அருமை
  சுட வேண்டியவர்களுக்குச் சுடுமா ?

  பதிலளிநீக்கு