சனி, 11 மார்ச், 2017

அவளுக்கு பொழிந்த மழை...

உன் ஜன்னலில்
தெறித்த அதே மழை
என் வாசலுக்கு
வந்து முறையிட்டது...முகம் மோத வந்த
மழையின் துளிகளை நீ
வளைக்கரம் கொண்டு
மறைத்தாகவும்..

மீறிய ஈரத்தை
ஈரமின்றி நீ
திரையிழுத்து
துடைத்த துயரத்தையும்
சொல்லியழுத மழைக்கு
நான் என்ன ஆறுதல் சொல்லியும்
நிறுத்தவேயில்லை அழுகையை...

குறைகள் யாவையும் கூறிவிட்டு
அழு என்றேன்...

குற்றப்பத்திரிக்கை
மழையின் மொழியாகவே
இருந்தது...

வருகையைச் சொன்ன
இடிக்கு
நீ செவிகளை மூடி
சிறுமைப் படுத்தினாயாம்..

மின்னலென
கண் நோக்கினால்
இமைகளை இறக்கி நீ
இழிவு செய்தாயாம்...

நீ போன பாதையில்
பின் தொடர்ந்த காதலை
கருப்புக்குடை கொண்டு
கலவரப்படுத்தினாயாம்..

வேண்டும் வேண்டுமென
விவசாயி காத்திருக்க..
வேலையற்ற
பெருமழையே..
வேறெங்கோ
பொழிந்து விட்டு
கோழையென  நீயழுதால்
ஏழையென்ன செய்யவென்றேன்..

மழையின் வரிகளை
மொழிபெயர்த்துனக்கு
சொல்லெனப் பெய்தது...

வான் மழையே..
நானும்கூட அவளிடம்
அப்படித்தான் கோபமாய்
என்றேன்...

மழை நின்று விட்டது.

14 கருத்துகள்:

 1. ,கோபம் கொடிதுன்னு மழையிடம் கூறுங்கள்...அருமை

  பதிலளிநீக்கு
 2. Mazhai vandhadho illaiyo, nangal nanaindhu vitom ungal kavidhai mazhaiyil. Enney ungalin karpanai thiran!! Arumai ayya👌

  பதிலளிநீக்கு
 3. மழை யை விரும்பாத நெஞ்சமும் உண்டோ...

  பதிலளிநீக்கு
 4. மழை யை விரும்பாத நெஞ்சமும் உண்டோ...

  பதிலளிநீக்கு
 5. மழைக்குக்கூடப் பிடிக்கவில்லை கோபம்!

  பதிலளிநீக்கு
 6. கோபம் கொள்ளாதே மழையே.....

  நல்ல கவிதை நண்பரே. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 7. மழை....
  அழகிய கவி மழையாய்...
  கோபம் கொடியது என்பதை மழை உணரட்டும்....
  அருமை அண்ணா.

  பதிலளிநீக்கு
 8. ஐயையோ மழைக்குக் கோபம் வந்தால் தாங்காது!! என்றாலும் அவளுக்குப் பொழிந்த மழையும் கோபத்திலும் அழகாய்த்தான் இருக்கிறது!!!

  பதிலளிநீக்கு
 9. சிந்திக்க வைக்கிறது தங்களின் கவிதை ஐயா.

  பதிலளிநீக்கு