வியாழன், 31 மே, 2018

யார் நீங்கள்?

நீங்கள் தான்
நட்சத்திரமென
உச்சத்தில்
வைத்தீர்கள்.


உறுப்பிலிருந்து
செருப்புவரை
சிலாகித்தீர்கள்.

அவன்
அண்டாவைக்
கவிழ்த்து
சிவனென்றான்..
நீங்கள்
கன்னங்களில்
அடித்துக்கொண்டு
சூடம்
காட்டினீர்கள்.

அவன்
சிந்தாத
வியர்வைக்கு
ரத்ததானம்
செய்தீர்கள்.

சிலுப்பிய
முடிக்கும்
சிகரெட்
குடிக்கும்
சீட்டி
அடித்தீர்கள்.

சிலர்
கிறுக்கன்
எனும்போது
முறுக்கி
மறுத்தீர்கள்.

அவன்
பயணங்களுக்கு
நீங்கள்
தான்
ஆன்மீக
ஆடை
அணிவித்தீர்கள்.

முன் தோன்றிய
மூத்தகுடி
அவன்
சொன்னதும்
வாக்குகள் கூட
வழங்கி
மகிழ்ந்தீர்கள்.

எட்டாத
உயரங்கள்
உங்கள்
முதுகின்
குனியலில்
நிகழ்ந்ததை
எப்போதும்
மறந்தீர்கள்.

ஏழைகளை
அரங்கத்து
எட்டா விலையில்
நீங்கள்
தான் சுட்டீர்கள்.

அரிதார முகங்களுக்கு
ஆட்சியைத்
தருவதில்
அமெரிக்காவுக்கும்
முன்னோடி
நீங்கள்.

நடிக்கவந்தவன்
மாற்றிக்கொள்ளவே
இல்லை.
நாடாளும்
கனவும்
நாமே தந்தோம்.

ஒப்பனை
முகத்தின்
சாயங்கள்
கலைந்தாலும்
விற்பனையாவது
உம்மாலன்றி
வேறென்ன?

ஒருநாள்
கால்ஷீட்டில்
ஓடோடி வந்தவனை
எப்படிக்கேட்கலாம்..

கேள்வி
உங்களுக்குத்தான்.

யார் நீங்கள்?


13 கருத்துகள்:

 1. அருமையான பதிவு .. மிகவும் தெளிவான வார்த்தைகள். கவிதை மிகவும் அருமை

  பதிலளிநீக்கு
 2. அருமை. மெல்லிய வார்த்தைகளில் உன்மை உரைக்கும் கவிதை.. நன்றி

  பதிலளிநீக்கு
 3. சூப்பர் ஸ்டார், தலைவர், நாமேகாரணம்
  நாடாளா நினைக்க வைத்ததும் நாம்.

  பதிலளிநீக்கு
 4. சூப்பர் ஸ்டார், தலைவர், நாமேகாரணம்
  நாடாளா நினைக்க வைத்ததும் நாம்.

  பதிலளிநீக்கு
 5. நடிக்க வந்தவன்
  நடிப்பை மறக்கான்
  நாடாளும் கனவைக் கொடுத்த
  நாமே ஏமாளிகள்!

  பதிலளிநீக்கு
 6. அருமை
  ஒரு சிறு கால இடைவெளிக்குப் பிறகு இன்றுதான் வலையுலகிற்குத் திரும்பியுள்ளேன்.
  இனி தொடர்வேன்
  நன்றி

  பதிலளிநீக்கு
 7. இது கவிதை அல்ல எரிமலை. இந்தக் கவிதையைப் பல பிரதிகள் எடுத்து நாடெங்கும். பரப்ப வேண்டும்.

  பதிலளிநீக்கு
 8. சில மெத்த படித்தவர்கள் கூட இதே தமிழ்மணம் திரட்டியில் இந்த நடிகர் தான் தமிழர்களுக்கு விடிவெள்ளி என்று தங்கள் பதிவுகளில் தொடர்ச்சியாக சொல்கிறார்கள். உண்மையாகவே எனக்கு புரியவில்லை அது எப்படி எந்த அரசியல் முன் அனுபவமும் இல்லாத ஒருவர் ஒரு மாநிலத்தை ஆள முடியும். அதுவும் தமிழ்நாடு முதலமைச்சர் பதவி என்பது officially அந்த மாநிலத்துக்கு மட்டும் உரியது என்றாலும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்கும் தேசிய இனமாக சில நாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் மிக முக்கியமானது. இது அவர்களுக்கு உண்மையிலேயே புரியவில்லையா? அல்லது அவர்கள் உடம்பில் ஓடும் விசிலடிச்சான் குஞ்சி ரத்தம் சிந்திக்க விடுவதில்லையா?

  பதிலளிநீக்கு
 9. அருமையான சொற்களில் அழகான உணர்வு வெளிப்பாடு.

  பதிலளிநீக்கு
 10. நீங்க ஒருதடவை கவிதை சொன்னா 100 தடவை கவிதை சொன்ன மாதிரி... பரட்டதலைய சீவி போட்டு வச்சு பாக்கலாமுன்னு பாத்தா நீ வேட்டு வைக்க பக்குறியேப்பா...!
  https://www.scientificjudgment.com/

  பதிலளிநீக்கு