செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

சென்னையில் ஒரு நாள்

சென்னையில் எனக்கு நேர்முகத்தேர்வு
கெட்டும் பட்டணம் போகச்சொன்னதால் ஒருவழியாக வந்தாகிவிட்டது...வேலை என்ற ஒன்று இல்லையெனில் புருஸலட்சணம் பறிபோகும் பரிதாபமான சூழல்.தனியொருவனுக்கு வேலையில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என பாரதி பாடாத தீட்சண்யம் ...ஆஹா..அவனே மஹா கவி.   எனக்கு வேலை இல்லையென்றால் இந்த சென்னையெ ஒழிந்து படாதோ என்ற என் நம்பிக்கையால் ...சூழுரைத்து விட்டு(வேறு யாரிடம்.. எனக்குள்ளே தான்) எந்த காகிதமும் இல்லாமல் கிளம்பிவிட்டேன். அத்தனை விளம்பரங்களில் மிக கவனமாக படிக்கிறேன்.ஆகா இந்த சென்னையில் இத்தனை வேலைகளா?முழு நேரம் 30000,பகுதிநேரம் 15000. தகுதி என்பதை படிக்கிறேன்.ஏதேனும் டிகிரி,+2 பாஸ்/பெயில்,எட்டாம் வகுப்பு போதும்..அய்யோ...வயது 18 முதல் இறக்கும் தறுவாயில் உள்ளவர்கள் வரை.மனதில் பதியும் அலைபேசி எண்.மனசுக்குள் மத்தாப்பு...கித்தாப்பு எல்லாம் டமால் டுமீல் என வெடித்து கிளம்புகிறது.அழைக்கிறேன்...ஏகப்பட்ட பிஸிகளுக்குப் பிறகு..மிக சாந்தமாக அப்படி ஒரு வணக்கம்.சார் வேலை விசயமாக அழைக்கிறேன்.."ரொம்ப சந்தோஷம் சார்,எந்த இடத்தில் இருந்து பேசுறீங்க சார்.". சார் நான் பில்லர்கிட்ட இருந்து பேசுறேன் சார்(அசோக் பில்லர்னு முழுசா சொன்னா மரியாதை இல்ல) "சரி சார் தி.நகர் போற ஷேர் ஆட்டோ எடுத்து MGR நகர் மார்கெட் எறங்கிட்டு கூப்பிடுங்க. சீக்கிரம் வாங்க இப்ப முக்கியமான இண்டர்வியூ இருக்கு.. போட்டோ இருக்கா?  இல்லயா .நோ ப்ராப்ளம் சார் சீக்கிரம் வாங்க...பார்த்தாலே பயப்படும் அந்த வெள்ளை வண்டியை இந்திரனின் ஐராவதமாய் நினைத்து உள்ளிருந்த தசாவதாரங்களூடே தி.நகர் போகுமா என கவனமாக கேட்டு ஏறுகிறேன்.போய்க்கொண்டே இருந்த வண்டியில் தசாவதாரங்களும் இறங்கியாயிற்று.ஒற்றை அவதாரமாய் இருந்த என்னை நரசிம்மவதாரமாய் முறைக்கிறார் ஓட்டுனர்..எந்த இடம்.....MGRநகர் மார்கெட்..அதுக்கு ஆப்போசிட் போற வண்டியிலல போகணும்.அப்படியே அந்த பக்கம் போனா வண்டி வரும். 10ருபாயோடு வண்டி போனது..இதற்கு இடையே 4அழைப்புகள்...சார் வந்தாச்சா?எந்த இடத்தில் இருக்கீங்க? மறுபடி ஐராவதம்...இந்த முறை பின்னால் ஒரு பிளாஸ்டிக் இருக்கை.மேலே பிடிக்க வழியில்லை.இருக்கையை பிடித்தால் முன்னால் இருக்கும் பேரிளம்பெண் அசைந்து கொடுக்கிறார்(அவர் இருக்கிறாராம்)முன்னால் ஏறிய இடம் தாண்டி சரியாக இரண்டு நிமிடத்தில் இறக்கிவிட்டார்.சார் (நொ)வந்துட்டேன்.ஓகே சார்..அப்படியே நேரா வந்தா ஒரு கல்யாண மண்டபம் இருக்கும்..சார் வந்தாச்சு..  இன்னும் கொஞ்ச தூரம் ஒரு எலக்ட்ரிகல் கடை வரும்.  சார் வந்தாச்சு.எதுத்தாப்புல பாருங்க..வாங்க சார்...தரைத்தளம் முழுவதும் ஆண்கள்...பெண்கள்...கோப்புகள்...அழகான சீருடை அணிந்த நடுத்தர வயது மனிதர் கரங்களை இறுக்க்க்கி குழுக்குகிறார்...வாங்க சார்..மாடியிலதான் இண்டர்வியூ.. மிகக் குறுகலான படிகளில் ஏறுகிறேன்.அங்கே ஒரு சீருடை மனிதன்.  பேருந்தின் நடத்துனர் போலவே பணத்தினை கைகளில் வைத்திருக்கிறார்.சார் ஒரு 20ரூபாய் கொடுங்க...ரெஜிஸ்டர் பண்ணனும்..மறக்காம இண்டர்வியூ சமயம் போனை சைலண்ட்ல போடுங்க...கதவு திறக்கிறது...இவ்வளவு பெறிய கதவுக்கு கண்டிப்பாக CEO.CHARMAN,எல்லாம் இருக்கப்போறாங்க..அய்யோ...கேள்வியெல்லாம் எப்படி இருக்குமொ... மூணு மணி மேட்னி காட்சிக்கு திரையரங்கத்திற்கு படம் போட்டவுடன் நுழையும் பாவப்பட்ட ஜீவனாய் நுழைகிறேன்..கிட்டத்தட்ட 200இருக்கைகள்.முக்கால் வாசி நிரம்பியிருக்கிறது.எதிரே ஒரு திரை..வட்டங்கள் வரைந்திருக்கிறது...அய்யய்யோ....இந்த வட்டமா?நடுவில் ஒரு மனிதன் கருநீல கோட் .கையில் ஒரு மைக். ...ஹாய் வணக்கம்..எப்டி இருக்கீங்க.....முதல் மூன்று வரிசையும் சேர்ந்து சொல்கிறார்கள்...நல்லா இருக்கோம்..  கண்கள் இருட்டுகிறது.....தடுமாறி எழுந்து வெளியே வருகிறேன்.வாசல் படி மனிதனை நோக்கி கையை நீட்டுகிறேன்.20 ரூபாயை கொடுங்கள்.கொடுத்தார்...நடந்து கொண்டிருக்கிறேன்...வீட்டிலிருந்து அழைப்பு......ம்ம்ம்...இண்டர்வியூ நல்லபடியா முடிஞ்சிருச்சு.....அவுங்களே கூப்பிடுவாங்களாம்......(சத்தியமா கூப்பிடாங்க சார்....அடுத்த வாரம் இதே நேரத்துக்கு வாங்கன்னாங்க)

5 கருத்துகள்:

  1. இன்னும் வேலை தேடின பாடு இல்லையா? பொண்ணுங்க கல்யாணம் ஆகுறதுக்குள்ளே எதுனா தேடுங்க....( மாப்பிள்ளைப் பயல்கள் கேப்பானுங்க)(அப்புறம் வேலையே இல்லை ஏது இப்புட்டு சொத்துனு வருமானவரியும் கேட்கும்0.....(சொத்து என்பது ஊரிலே இருக்கிற ரெண்டு டிரங்குப்பெட்டி என யாருக்கும் தெரியாம பாத்துக்குவோம்

    பதிலளிநீக்கு
  2. அனுபவம் புதுமை.. அதை எழுதிய விதம் அருமை.!

    அனுபவங்கள் நமக்கு கற்றுத்தருவது வாழ்க்கையை ஜெயிப்பதற்கு தானே என நினைத்து மேலே செல்லுங்கள்.

    பதிலளிநீக்கு