ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

புதிதாய் பிறந்தேன்....

”மனுசங்க...என்னமா எழுதியிருக்காங்க...எத்தனை பக்கங்கள்..எவ்வளவு தகவல்கள்... என்ன நடை...விறுவிறுப்பு...
சனியன் ...தூங்க விட மாட்டேங்குதே....சும்மா....குறு குறுங்குதே....

இப்படித்தான் சில புத்தகங்களையும், தளங்களையும் பார்க்கும் வேளைகளில்
மனசு தன்னிரக்கம் கொள்ளும்`

அந்த அற்புதவனத்தில் வான்கோழியாய் நான் சில நேரங்களில் ஆடிப்பார்க்க நினைப்பதுண்டு.
ம்...ஹீம்.. வேலையப்பாருடா பொழப்பத்த பயலே...
மனக்குரங்கு கற்பனைப்பூமாலையை,,,,,

என்ன செய்யவேண்டுமோ...
செய்தேவிடும்.


கடந்த மாதம் ஒருநாள்..
நிலவன் அய்யாவிடமிருந்து குறுஞ்செய்தி...
வலைப்பதிவர் சந்திப்பு விசயமாய் ..சந்திக்கலாம்.. வாங்க...

இரும்படிக்கிற இடமாச்சே......நமக்கென்ன வேலை...
சரி பார்க்கலாம்```

அக்காவின் அலுவலகத்தில் கூடுகிறோம்.
இருள் கவிழ்ந்த சூழல்..
காத்தாட வெளியில் உட்கார...
வடை...கப்  டீ என தொடர்கிறது.
வித்தியாசமான சிந்தனைகள்..
வியக்கும் தகவல்கள்..
ஆரம்பகட்ட திட்டமிடல்களோடு ...
நான் என்ன செய்தேன் எனத்தெரியாமலேயே திரும்புகிறேன்.


மீண்டுமொரு சந்திப்பு சில நாள்களில்...

இந்தமுறை ஒரு பள்ளியில்..

வடையிலிருந்து பப்ஸ்-க்கும்..
லட்டுக்கும்....நல்ல டீ என  முன்னேறியிருக்கிறது கூட்டம்.

இந்த தடவை பூமிபூஜை போட்டு அஸ்திவாரமே ஆரம்பித்துவிட்டார்கள்..
சரி..அவுங்கவுங்க தள முகவரியை தாருங்கள்...
விவரமெடுக்க வேண்டும்.
ஐயோ...வந்துச்சுடா...தலைக்கு ஆபத்து...
இப்படி மாட்டிட்டயேடா தம்பி...

தப்பிக்க வழியே இல்லாமல் ஒரு தள முகவரியை சொல்லிவிட்டேன்.

இரவோடு இரவாக தளத்தை கட்டியாச்சு....

அப்புறம்...
ஏதாச்சும் எழுதிக்காட்டனுமே...
துப்பிருவாங்களே....

விதியின் மேல் பழியைப்போட்டு முயற்சிக்கிறேன்.

அவளைக்காதலித்த நாள்களில் அவளின் கடிதங்களுக்காகக்கூட அத்தனை
காத்திருந்ததில்லை.
யாராச்சும்...ஏதாச்சும்.. சொல்லிருவாங்களா?...

நிலவன் அய்யாவின் முதல் குரல்..
“நல்லாஇருக்கு...நடத்துங்க”

நிஜமா   பொய்யாவென   தெரியாமலே எழுதுகிறேன்.

அவரும் தொடர்ந்து நல்லாயிருக்குன்னு சொல்றார்...


ஐயா.....என்னிலும் பெரியவர்களே.....
நீங்கள் நடத்திய ஆரம்ப கூட்டங்களுக்கே..
எழுதத்தொடங்கியிருக்கிறேன்.
என்னைப்பொறுத்தவரை
உங்கள் முயற்சியின் முதல் வெற்றி எனக்கே என்பேன்.

வால்ட் டிஸ்னியின் கனவுகள் போல மனசுக்குள்
“பதிவர் சந்திப்பை” நடத்திப்பார்க்கிறேன்.

சூழல் என்னை சிறிது அப்புறப்படுத்தியிருந்தாலும்
அங்குமிங்கும் நகராமல் “பதிவர் சந்திப்பு” குறித்த அனைத்தும் அறிகிறேன்.

மன்னித்துக்கொள்ளுங்கள்...
சீக்கிரம் வந்துவிடுகிறேன்.
உங்களுக்காக இல்லையென்றாலும்
எனக்கும் இப்போது தேவைப்படுகிறது..
“பதிவர் சந்திப்பு”

4 கருத்துகள்:

 1. வணக்கம்...

  தங்களின் வருகைப் பதிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது... நன்றிகள்...

  visit and check : http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-2.html

  how is it ...? excited...? put a comment... thank you...

  அன்புடன்
  பொன்.தனபாலன்
  9944345233

  பதிலளிநீக்கு
 2. முதல் தகவல் கொடுத்தவரின் பதிவை இப்போதுதான் நமது விழாத்தளத்தில்( “பதிவர்களின் பார்வையில் பதிவர் விழா“ ப்பிரிவில்) உங்களின் முதல்தகவலைப் போடும்படி ஆனது சோகம்தான் எனினும் லேட் இஸ் பெட்டர் தேன் நெவர். பார்க்க -http://bloggersmeet2015.blogspot.com/p/2015.html தொடர்க நண்பா.

  பதிலளிநீக்கு
 3. எழுத்துலகம்...கைகள் விரித்துக் காத்திருக்கிறது

  பதிலளிநீக்கு