ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

அது தானே?

நான்

அதுதான்
என்றேன்..

அவள்
இல்லையென்கிறாள்.

∆∆∆

பசிக்கவே
இல்லை..

அதுதான்
என்றேன்.

ருசித்துப்புசி
என்கிறாள்..

∆∆∆

கனவுகளில்
நீ
மட்டுமே.

அதுதான்
என்றேன்..

உழைத்துத்தூங்கு..
கனவுகளே
வாராதென்றாள்.

∆∆∆

உன்னோடே
இருக்கத்
தோன்றுகிறது

அது
தானென்றேன்..

உருப்படும்
வேறு
வழிபார்
என்கிறாள்.

∆∆∆

உனக்கொரு
புடவை
பார்க்கிறேன்.

அதுதான்
என்கிறேன்..

உன்
ஆடைகளை
தேய்த்துப்போடு
என்கிறாள்.

∆∆∆

இரவுமுழுவதும்
பேசு.

அதுதான்
என்கிறேன்...

பேசி
விடிந்ததும்
தூங்கு
என்கிறாள்..

∆∆∆
உன்னை
நினைத்தே
கவிதைகளெல்லாம்...

அதுதான்
என்றேன்.

பத்தாது
இன்னும்
என்கிறாள்..

∆∆∆

உணவாய்
இருக்கிறாய்.

அதுதான்
என்றேன்..

ஒவ்வொரு
முறையும்
உண்டாயா
என்கிறாள்.

∆∆∆

எங்கிருந்தோ
இயக்குகிறாய்..

அதுதான்
என்கிறேன்...

எனக்கொன்றும்
தெரியாதென
இறுகிக்கிடப்பாள்.

∆∆∆

எல்லாம்
சொல்லும்
சேதிகள்..

அதுதான்
என்றேன்..

சட்டென
மறைந்துவிட்டாள்..

∆∆∆

வருவாளென
காத்திருக்கிறேன்...

அட..
அதுவே தான்.


9 கருத்துகள்:

 1. அதானே!! அதுவேதான்!!!! அதாகட்டும்!
  அருமை செல்வா...

  பதிலளிநீக்கு
 2. அதானே என்றால் எது தானே?

  எதுவென புரியாமல் அதுவாய் இருக்குமோ இதுவாய் இருக்குமோ என தலையை பிய்ச்சிக்க வைக்கின்றீர்கள் செல்வா சார்!

  எதுவாயிருந்தாலும் அனைத்தும் நன்மைக்கேதுவாய் இருக்கட்டும் சார்!

  பதிலளிநீக்கு
 3. காதல் என்பதே புரியாத விஷயம்தானே என்று சமாதானப் படுத்திக் கொள்கிறேன்!

  :))

  பதிலளிநீக்கு
 4. அது அதுவாக இருந்தபோது
  இது இதுவாக இருந்தது,
  பிறகு
  இது அதுவான போது
  அது இதுவானது
  பின்னரும்
  அதது அதது வாக
  இதிது இதிதுவாக..
  நன்றி - மகுடேசுவரன்(?)
  எங்கோ படிச்சு மண்டை காய்ஞ்ச கவித
  சரிதான் நீங்களும் புரியாத மாரி எழுத ஆரம்பிச்சிட்டீங்க..
  இனிமே பெரிய ஆளாயிருவீங்கய்யா.. நல்லா இருங்க.

  பதிலளிநீக்கு
 5. அது தான் அதுவே தான்
  அது இல்லாவிடில் எதுவும் இல்லைத் தான்
  (வேதாவின் வலை)

  பதிலளிநீக்கு