செவ்வாய், 1 நவம்பர், 2016

கொங்குதேர் வாழ்க்கை....

ஒரு
இறுதி ஊர்வலம்
பார்த்தேன்..




முதிர்ந்த
மனிதனின்
முடிவுப்பயணம்.

அது
ஊர்வலமாய்
இல்லை..

ஊரைக்கடந்து
கொண்டிருந்தது..

சொர்க்கரதமெனும்
பெயரிட்ட
வாகனம் அது.

ஒற்றைக்கையை
உச்சியில்
பிடித்து
புகை
பிடித்துக்
கொண்டிருந்தார்
ஒருவர்.

பூக்களை
பறித்து
குரங்காய்
இருந்தனர் சிலர்.

இமயம்
சரிந்ததென்ற
தனக்கான
அஞ்சலியை
ஏனோ
இறந்தவர்
கவனிக்கவேயில்லை.

உள்ளிறங்கிய
பானங்கள்
குழல்களிலும்,
கொட்டுகளிலும்,
ஆட்டங்களிலும்
வழிந்து
நிரம்பின
சாலையில்..

அத்தனை
பிள்ளைகளும்
நனைந்திருந்தார்கள்.

கொள்ளிச்சட்டி
தூக்கியவன்
இடுப்பில்
சொருகிக்கிடந்த
அலைபேசி
எடுத்துப் பேசுகிறான்..

என்னவாயிருக்கும்.?






































5 கருத்துகள்:

  1. இறுதி ஊர்வலம் பெரும்பாலும்
    மதுவில் தோய்வோரின்
    ஆடலுடன்தான் செல்கிறது

    பதிலளிநீக்கு
  2. மது இல்லாத நிகழ்வுகள் இல்லை என்றாகி விட்ட்து.
    கொள்ளிச் சட்டியோடு செல்பி எடுத்து அனுப்பியிருப்பான். ;)

    பதிலளிநீக்கு
  3. கொடுமை... இப்போது இதுதான் இறுதி ஊர்வலம்....

    பதிலளிநீக்கு
  4. Unmai nigazhvugal katchigalaay viriya, azhagana varthaigal eduthu indraiya panbaatu malai thoduthu ulleergal. Aduthu, Verenna????? Ellam selfie eduthu ethanai bikes kadandhalum avanuku thevai likes matume. Kollichatti thulluvadhum ayya pona idathuku sellathano ??? Appo seekiram fb la podunga.

    பதிலளிநீக்கு