செவ்வாய், 11 ஜூலை, 2017

நிலவே...மலரே...

நீரடிச்சா
நீர் விலகும்
நீயடிச்சா
நான் சிரிப்பேன்...
மையிட்ட
மண்டைக்குள்
தாய்மை
கொஞ்சம்
ஒளிந்திருக்கும்.
பொய்யற்ற
உம்
பேச்சில்
பூவாசம்
தெரிந்திருக்கும்.

எழுதும்
நான்
உந்தன்
ஏகலைவன்.
கரம்
கொண்டு
காக்கின்றாய்
குருவே
நீ
என் தலைவன்.

சாரதியாய்
நானிருக்க
பாரதியாய்
நீயிருப்பாய்.

எண்ணெய்
கொண்டு
காரோடும்..
என்னை
எதில்
இயக்குகிறாய்..?

வயசெனக்கு
பார்த்திருந்தால்
வாசல்
கூட
தொடமாட்டேன்..
மனசுனக்கு
மலைபோலே
மகனானேன்
எந்தை வாழி!

தோழியெரே
துணைவி
ஆனார்.
தோள்கொண்டு
நீ சுமக்கும்
தோதான
மாலையானார்.

சொல்லுக்குள்
அன்புவைத்து
உள்ளுக்குள்
செலுத்துகிறார்.
சர்க்கரை
அதிகமான
சாத்தியங்கள்
இப்படித்தான்.

வால்கா
நெரூடா
இலட்சியா..
உங்கள்
வரலாற்று
சாதனைகள்...

வடித்திட்ட
வரிகளெல்லாம்
வெடிக்கும்
ஒரு
வான் வெடிகள்.

இணையடிகள்
இன்னும்
போக
இருக்கிறது
பெரும் பாட்டை..
இன்னுமொரு
நூற்றாண்டு
வாழவேண்டி
இயற்றுகிறேன்
என் பாட்டை...⁠⁠⁠⁠

12 கருத்துகள்:

  1. எனது வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  2. “உங்கள் அன்பிற்கு நன்றி” எனும் சொற்கள் போதாத நிலையில் இப்போதைக்கு அதைத்தான் செய்ய முடிகிறது.
    தோழமை தொடர்வோம் செல்வா! வாழ்த்திய நம் வலை நண்பர்களுக்கும் எனது நெகிழ்வான வணக்கம்.

    பதிலளிநீக்கு