புதன், 31 ஜனவரி, 2018

கிறிஸ்துவும் இந்தியாவும்..

இறை பற்றிய  வரலாறுகளில் நிஜத்தைவிட கற்பனைகள் அதிகமாய் விரவிக்கிடப்பதை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.


நிஜத்தை ஆராயப்புகும் அநேகபேரும் தன் விருப்பை அல்லது அறியாமையை அதில் ஏற்றிவிடுவதும் சகஜமே...

எந்த வித ஆதாரங்களும் இல்லாமல் வரலாற்றை தன்பால் திருப்பும் மேதமைகளின் இடையே எடுத்துக்கொண்ட ஒரு நூலுக்காக உழைத்திருக்கும் உழைப்பு கற்பனையிலும் அதிகம்..

உலகின் பெரும்பாண்மையான மதங்களுள் ஒன்றான கிறிஸ்துவத்தை..இதுவரை நாம் காணமுடியாத ஒரு ஆராய்ச்சிப்பார்வையில் பார்த்திருக்கும் நோக்கு தைரியமானது..

ஒரு பாத்திரத்தைப் பற்றிய இன்னொருவரின் மேற்கோளுக்கே சோடாபாட்டில் பறக்கக்கூடிய இன்றைய நிலையில் ..
நூலாசிரியரின் தலைக்கு மேல் ராக்கெட் வெடிகுண்டே வந்துவிழுந்திருக்க வேண்டிய நிலை மறுப்பதற்கில்லை..

ஆயினும் நம்புவோம். நம்மிலும் அயலார் விவாதங்களில் நாக்கை அறுப்பதாகவோ..தலைக்கு விலைவைப்பதோ இல்லை...

சரி..விசயத்திற்கு வந்துவிடுவோம்...
12 வயதுக்கும் 30க்கும், சிலுவையில் அறையப்பட்டபின்பும் அவரது இறுதி வரையிலான வாழ்க்கையை ஆதாரங்களுடன் நிறுவப்பார்க்கிறது இந்நூல்.

அந்த காலங்களில் இயேசு காஷ்மீரத்தின் ஒரு பசுமைப்பள்ளத்தாக்கில் வாழ்ந்திருப்பதான ஏகப்பட்ட தரவுகள்...

அனைத்திலும் இயேசுவின் தத்துவங்களிலும்,கதைகளிலும்,நற்செய்திகளிலும் அடிநாதமாய் பௌத்தத்தின் சாரமே இழையோடிக்கிடப்பதை மிகச்சரியான ஆதாரங்களுடன் நிரூபிக்கிறது...

இஸ்ரவேலர்கள்...எபனேசர்கள்,பாலஸ்தீனர்கள்,மற்றும் உலகின் ஆகப்பெரிய தத்துவவாதிகளின் மேற்கோள்கள்..

சிலுவைலிடப்பட்ட இயேசு உயிர்த்தெழவே இல்லை..ஏனெனில் அவர் மரிக்கவே இல்லை...யோவானின் முயற்சியால்.சிலுவைலிடப்பட்ட இயேசு மிகச்சீக்கிரமாகவே இறந்துபோனதாய் அறிவிக்கப்பட்டதும்,அவரின் உடலின் மேல்.செலுத்த வாங்கிவரப்பட்ட 40ராத்தல் அளவான மருந்துகளும் வாசனை திரவியங்களும்,அவரின் உடலின் மேல் போர்த்தப்பட்ட லினன் துணியிலான இன்றும் காணக்கிடைக்கும் அச்சும் இயேசுவைப்பற்றிய பல ரகசியங்களை திறக்கின்றன..

சுவிஷேசங்களில் தான் எத்தனை வகைகள்.

மாற்கு,லூக்கா, இவர்களிலிருந்து மாறுபடும் யோவானின் செய்திகள்...
ஆதியில் சவுல் என்ற பெயரும் பின் பவுல் என மாறிய ஒருவர் தன் இச்சைகளை நற்செய்திகளின் மேல் இட்டு நிரப்பியதையும்.
ஒப்பு நோக்கும் ஆசிரியர் மிகத்தெளிவான ஒரு முடிவை நமக்கு காட்டுகிறார்...

ஏகப்பட்ட பாலஸ்தீன,ரோம,இஸ்ரவேல் பெயர்கள் கொட்டிக்கிடக்கும் நூல் எந்த இடத்திலும் மூடிவைக்கத்தோன்றவில்லை..
இதனை கிறித்துவத்தில் ஈடுபாடுடைய எவரேனும் படித்து மறுப்புகளோ கருத்தோ சொல்வாரெனில் இன்னும் சிறக்கும்..

இயேசுவைப்பற்றிய வரலாறு என்பதற்காக மட்டும் நான் இந்த நூலை எடுக்கவில்லை..
இதன் தலைப்புக்காகவே வாசித்தேன்.
நம் தேசத்தின் புத்தன் தான் எத்தனை மகத்தானவமாய் இருந்திருக்கிறார்...
லாமாக்களின் தலைமையை தேர்ந்தெடுக்கும் முறை..ஒரு திரைப்படமாய் விரிகிறது...

ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர் ஒருவர் காஷ்மீரத்தின் புத்த கோவில் ஒன்றின் சுவடிகளில் காணும் ஏசு பற்றிய குறிப்புகளுடன் விரியும் நூல்...பறக்கிறது..
பிலாத்துவால் தண்டிக்கப்படும் இயேசுவின் வருகை.
வருமானத்திற்காய் திட்டமிட்டு இயேசுவை சிலுவையேற்றும் பூசாரிகள்...
பாருங்களேன்...
இந்த பூசாரிகள் அந்த காலத்தில் கொலை செய்யவே தூண்டியிருக்கிறார்கள்..

இயேசுவின் சீடர்களே அவரிடம் முழு நம்பிக்கை வைக்காத போது இயேசுவிற்கு வரும் கோபம் கலந்த வாக்கியங்கள்..
போலிப்பூசாரிகளிடம் இயேசு கேட்ட கேள்விகள் என இயேசுவை ஒரு கடவுளின் குமரன் என்பதிலும் சமூக அழுக்கை வெளுக்க வந்த கலகக்காரர் என்பதே சரியாய் இருக்கிறது.

இருபைத்தைந்து ஆண்டுகள் தண்ணீரில் பாதம் பதியாமல்.நடக்க முயற்சி செய்யும் ஒரு துறவியிடம் புத்தர் சொல்கிறார்..."ஏன் இத்தனை வருடங்களை வீணடித்தாய்..கொஞ்சம் காசு கொடுத்திருந்தால் படகில் போயிருக்கலாமே"

சிலுவையிடலுக்குப் பின் நம்ப மறுக்கும் சீடர்களிடம் இயேசு என்னவெல்லாம்.செய்யவேண்டி இருந்திருக்கிறது..

கலகங்களால் சிவப்பாகிக்கிடக்கும் இன்றைய காஷ்மீரத்தின் அந்தக்கால சந்தோஷப் பள்ளத்தாக்கில் இயேசு வாழ்ந்ததன் நினைவுகள் இன்னும் அவர் சார்ந்த பெயர்களோடே இருப்பதும்..

ஒரு பள்ளத்தாக்கில் அமைதியாய் உறங்கிக்கொண்டிருக்கும் மேரியின் கல்லறையும்...

மற்றொரு சூழலில் கிழக்கு மேற்காய் அடக்கமாகியிருக்கும் இயேசுவிற்கும், இந்தியாவிற்கும் ஏராளமான தொடர்புகள் இந்த நூலில் வெளிச்சமாகி இருக்கிறது..

உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தன் சொந்த தேசத்தைக்குறித்த செய்திகள் யாரையும் மகிழ்ச்சிப்படுத்துவதே..அதிலும் ஒரு இதிகாச நாயகனின் வாழ்வின் பெரும்பகுதி நம் அன்னை பூமியில் நிகழ்ந்திருப்பதாய் ஆதாரங்களுடன் சொல்வதைக்குறிக்கவே இந்த நூலை நான் அறிமுகப்படுத்துகிறேன்..
மற்றபடி இயேசுவைக்குறித்த எந்த விவாதங்களுக்கும் நான் தயாரில்லை...
என் படிப்பறிவின் மீதான எந்த அவதூறையும் நீங்கள் என் மேல் எறியும் முன்..
இந்த நூலை படித்துவிட்டு வாருங்கள்..
ஆமென்.
.


4 கருத்துகள்: