புதன், 25 நவம்பர், 2015

உயிரோவியம்.....

சின்னவள்
சிறு காகிதம்
எடுத்தாள்

தளிர் கரம் கொண்டு
சிறு
மாற்றங்கள்
செய்தாள்.

ஒழுங்கற்ற
ஒரு வடிவமாய்
மாறியிருந்தது
காகிதம்.

எழுந்து நில்
என்றாள்
சிரி என்றாள்.

“டப்” என்ற
ஓசையுடன்
உன்னைப்
போட்டோ
எடுத்துவிட்டேன்
என்றாள்.

அழகாய் இருக்குமா
என் முகம் என்றேன்...

ம்ம்ம்... என்றாள்.

மறக்கவே முடியாத
அழகாய் இருந்தது

அவள் முகம்

16 கருத்துகள்:

 1. அருமை..போ்ட்டோ எடுத்த விதத்தை சொல்லிய விதம்......

  பதிலளிநீக்கு
 2. இந்தக் கவிதையைப்போலவும்...
  மனம் கவர்ந்த கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மயில் பார்த்து ஆடும் வான்கோழி நான் ...நன்றிகள் அய்யா...

   நீக்கு
 3. அழகாய் மிளிர்ந்தது அவளு முகம் உந்தன் ஒற்றைப்புன்னகையில்!

  பதிலளிநீக்கு
 4. அழகு நண்பரே
  சின்னவள் எடுத்த போட்டோவைப் போல்
  தங்கள் கவிதையும் அழகு

  பதிலளிநீக்கு
 5. சின்னவள் எடுத்த புகைப்படம் அவளைப் போலவே அழகாய் இருந்தது!

  ரசித்தேன் நண்பரே.

  பதிலளிநீக்கு