வியாழன், 5 நவம்பர், 2015

கார் காலம்

எப்போதேனும் 
வாய்த்து விடுகிறது 
சின்னவளுடன் 
முன்னிருக்கைப் பயணம்
.


ஓடி ஒளியும் மரங்களெண்ணி, 
ஊர்ப்பெயர்கள் வாசித்து, 
குகையென 
குவிந்த மரங்களினூடான 
பாதைக்கு மயங்கி, 
எங்கேனும் 
மயில் தெரிந்தால் 
இவளாடி,...
என்னுடனான பயணங்களில் 
எப்போதும் 
அவள் கண்களில் புன்னகை..
வாழ்க்கை முழுதும் 
வேண்டுகின்றேன்..
“கார் காலம்”.

11 கருத்துகள்:

 1. சின்னவளின் குதூகலம் கண்டு என்னுள்ளும் பெருகுது மகிழ்வு. காட்சிகளைக் கண்முன் கொணரும் வரிகள். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் நன்றிப்பூக்கள்...

   நீக்கு
 2. புன்னகை..
  வாழ்க்கை முழுதும் vaalka....vaalka....

  பதிலளிநீக்கு
 3. கண்கள் புன்னகைக்க
  மனம் மகிழ்ச்சியில் துள்ள
  என்றென்றும் தொடரட்டும்
  கார் காலம்

  பதிலளிநீக்கு
 4. எப்போதேனும்
  வாய்த்து விடுகிறது
  சின்னவளுடன்
  முன்னிருக்கைப் பயணம்----எப்பவாவதுதானா...???
  .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்...சென்னையில் அவளும் புதுகையில் நானுமாய்...உயிரிணைந்து....

   நீக்கு
 5. ரசித்தோம்...உங்கள் சின்னவளுடனான கார்காலத்தை..

  பதிலளிநீக்கு