சனி, 21 நவம்பர், 2015

என்னப்பெத்த ஆத்தா.....

எழுத்துக்கும்
எனக்குமான
இடைவெளி
அதிகமாயிருந்தது...

கண்மூடித்
தூங்கும் வேளை
கும்மாளம் போடும் கவிதைக்குரங்குகள்,
விடியும்
வேளைகளில்
விலகிப்போகும்
விரக்தியில்....

ஏதோ உந்துதலில்
எழுத
ஆரம்பிக்கின்றேன்.

சின்னவள் பற்றி
எழுதுவது
இயல்பாய்
இருக்கிறது.
எனக்கும் பிடிக்கிறது.

நான் பெற்றவளே -
என்
எழுத்தை மீட்டியதால்-

எனக்கே
தாயானாள்..

அடி...என்னப் பெத்தவளே...

8 கருத்துகள்:

 1. உன்னையும் கவிஞனாய் பெற்றவள் மகளையே தாயாக்கி தாலாட்டியது உன் நேசம்தான்
  என்றும் சின்னவளாய் இருக்கட்டும்
  உன்னினைவுகளில்!

  பதிலளிநீக்கு
 2. அருமை நண்பரே.. தொடர்ந்து எழுதுங்கள்..

  பதிலளிநீக்கு
 3. எனக்கும்தான் நண்பரே..இரவில் தூங்கையில் கவிதை ஆறாக பெருக்கெடுக்கும் விடிந்துவிட்டால் வற்றி வரண்டு போய்விடும்..

  பதிலளிநீக்கு
 4. ம்ம் இப்படித்தான் எழுத நினைக்கும் போது கமல் பாடிய பாடல் வரிகள் தான் ..கவிதை கொட்டும் எழுத நினைக்கையில் முட்டும்...என்று...

  மகள் தாயானதால் ...கவிதை அதான் கொட்டுது....அருமை அருமை

  முன்னால் போட்ட கமென்ட் என்னாச்சுனு தெரிலயே...

  பதிலளிநீக்கு