புதன், 4 நவம்பர், 2015

சிவப்பில் கரையும்.....

மருதாணி 
வைக்கும் நாட்களில்
மிரள வைத்து விடுகிறாள்
என்னை.

உதிர்வதை ஒட்ட வைத்து,
தண்ணீர்
தாங்கி கொடுத்து,
முகத்தேன்
எடுக்கவரும்
கொசுவை
ரத்தமின்றி
கொன்றென,

தூக்கம் தொலைத்த
இரவின் கோபம்

சின்னவள்
விரல்களின்
சிவப்பில்
கரைந்து போகிறது

13 கருத்துகள்:

 1. வேணுமின்னே மூஞ்சி முழுக்க அப்பி விட்டது...மருதாணியை, அப்படியே கை முழுக்க அப்பி விட்டது, டிரஸ்ல அப்பி விட்டது, இப்படி எல்லா உண்மையும் சேத்து எழுதுங்க டாடி...(எப்பூபூபூபூபூடி)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் கலாய்ப்பதற்கு முன்பு குழந்தையே அப்பாவை கலாய்த்து கொண்டிருக்கிறது.... நடக்கட்டும் நடக்கட்டும்

   நீக்கு
  2. ஹஹஹஹ் இப்படில்லா இருக்கணும் செல்லம்!!!!

   நீக்கு
 2. ஆஹா உண்மைதான்...ஏஞ்சல் சொன்னதும் சேர்த்துக்குங்க..

  பதிலளிநீக்கு
 3. அருமை மகளே சொல்லிவிட்டார்
  முழுமையும் எழுதுங்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 4. நீங்க ஒன்று சொல்ல ,உங்கள் அருமை மகளே இன்னொன்றை சொல்லி விட்டாரே :)

  பதிலளிநீக்கு
 5. என்ன ? நண்பரே வெளியில் ஆள் தேவையில்லை போலயே... வீட்டுக்குள்ளேயே ஆள் இருக்கிறது ஹாஹாஹா.

  பதிலளிநீக்கு
 6. சின்னவளினூடான ரகசியங்கள் இன்னும் எவ்வளவு இருக்கின்றதோ!!!

  பதிலளிநீக்கு