சனி, 7 நவம்பர், 2015

ஆகாயம் மேலே....

என்
தோள்களின்
சவாரியில்
திளைத்தவள்
சின்னவள்.

உள்ளூரின் கூச்சம்
எல்லை
தாண்டியதுடன்
மறைந்து போகும்.

நெருக்கும் கூட்டத்தில் இருக்கிக்கொள்ளும் கால்களிரண்டும்
கழுத்தை.

இறங்க மறுப்பாள்...

நேற்றொரு போட்டியில்
இரு நொடிகள்
என்னைத்
தூக்கிவிட்டாள்.

நான்
பூமிக்கு
வர
நிறைய நேரமானது..

10 கருத்துகள்:

 1. ஒரு தந்தைக்கு
  இதைவிட
  பேரின்பம்
  என்ன இருக்கப் போகிறது
  வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு