புதன், 4 நவம்பர், 2015

எனக்கே வழியானாள்...

பாம்பென நெளியும்
ரயில் பாதை
ஓரங்களில்
நடந்து செல்கிறோம்
நானும் சின்னவளும்...

என் பால்யத்தின்
கதைகளை
கரங்களை
இறுகப்பிடித்துக்
கேட்கிறாள்..

சோத்துக்கு செத்தது,
கால்சட்டை
தபால் பெட்டியாகியது,
எழுத முற்பட்ட
காதல் கடிதம்,
சிகரெட் தொடங்கியதென
முடியும் வேளையில்,,,,

என் விரல்களைப்பற்றி
வீடு வந்து சேர்த்தாள்.

4 கருத்துகள்: