திங்கள், 9 நவம்பர், 2015

தினம்தோறும்....

ஈரம் நெளியும்
சாலைகள் தோறும் மனிதக்கால்களின்
நடமாட்டம்.

எட்டி இருந்து
பார்க்கலாமா?...
இருட்டைக்கிழிக்கும்
மத்தாப்பு?

எண்ணெய்க் குளியல்..
சரசரக்கும் புத்தாடை..
குறைந்த பட்சம்
அதிகாலை விழித்தல்...

எதுவுமில்லை.

தீபாவளி
என்கிறேன்.
சின்னவள்
சிரித்துவிட்டுப்
போகிறாள்.

அட,
தேவதையின்
வீட்டில்
தினந்தோறும்
தீபாவளி.

21 கருத்துகள்:

 1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
  உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"

  பதிலளிநீக்கு
 2. உங்கள் வீட்டு குட்டி தேவதைக்கு எனது ஸ்பெஷல் இனிய தீபாவாளி வாழ்த்துகளை சொல்லிவிடுங்கள்.

  பதிலளிநீக்கு
 3. இன்பத் தீபாவளி உங்களிற்காகட்டும்
  அன்புடன் இனிய வாழ்த்துகள்.!
  இன்னமுத நன்றியுடன் தீபமொளிரட்டும்.

  பதிலளிநீக்கு
 4. தினந்தோறும் தீபாவளி
  எங்களின் மனங்களில் என்றும் வீசுது!
  தங்களின் கவிதை ஒளி!
  ரசித்தேன் நண்பரே!
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 5. இனிய தீப ஒளி திருநாள்
  நல்வாழ்த்துகள்
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 6. புகைப்படமும் அழகு தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. அட,
  தேவதையின்
  வீட்டில்
  தினந்தோறும்
  தீபாவளி.யா...!!!!

  பதிலளிநீக்கு
 8. அட,
  தேவதையின்
  வீட்டில்
  தினந்தோறும்
  தீபாவளி.யா...!!!!

  பதிலளிநீக்கு
 9. ஓ! சின்ன தேவதையின் வீட்டில் தினம் தோறும் தீபாவளி!!! அவளுக்கும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர், சுற்றத்தார் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். (அதான் தினம் தோறும் தீபாவளிதானே அதான் லேட்டா வந்தாலும் இப்படி ஒரு சாக்குப் போக்கு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... நீங்கள் வந்ததே போதும்....நன்றிகள் உங்களுக்கு....

   நீக்கு