திங்கள், 30 நவம்பர், 2015

சப்பாத்தி என் உணவல்ல...

சின்னவளும்
நானும்
திரும்பிய சாலையில்..

சிதறிய
குல்மொஹர் மரத்தின்
பச்சைக்காய்களை
ஊதித்தின்கிறேன்.

நுழைந்ததும்
பரபரக்கிறாள்..
விஷமாயிருக்குமோ
என
விழிகள் நனைக்க

பற்பசை நீட்டி
தாதியாகிறாள்.

சொல்லவே
போவதில்லை..

சப்பாத்திக்கள்ளிப்
பழங்களும்
என்
சாப்பாடான
இளமையை...

9 கருத்துகள்:

  1. சொல்லா விட்டாலும் புரிந்து கொள்வார்கள்...

    பதிலளிநீக்கு
  2. விரும்பிய எதுவும் விஷமாவதில்லை
    அக்கறையாய் அவள் அருகிலிருக்கும்போது!

    பதிலளிநீக்கு
  3. படம் பார்த்து புரிந்துகொண்டேன் நண்பரே.......

    பதிலளிநீக்கு
  4. இறுதி வரிகள் இன்னும் கொஞ்சம்
    அழுத்தமாய் திட்டவட்டமாய் இருந்தால்
    கவிதை இன்னும் சிறப்பாய் இருக்குமோ ?

    பதிலளிநீக்கு
  5. உண்மைதான்....இக்காலக்குழந்தைகள் பார்த்தே இருக்க மாட்டார்கள்

    பதிலளிநீக்கு
  6. செம கவிதை சார்.. தளம் புதிது.. இனி தொடர்வேன்... பிக்சர் சூப்பர்..

    பதிலளிநீக்கு
  7. ம்ம்ம் சப்பாத்தி என்றால் நாம் சுட்டுச் சாப்பிடும் சப்பாத்திதான் தெரியும் இத்தலைமுறையினறுக்கு சப்பாத்திக் கள்ளி தெரிந்திருக்குமே சின்னவளுக்கு....தெரியாமல் இருக்குமா என்ன....

    பதிலளிநீக்கு