புதன், 4 நவம்பர், 2015

ஓம்...சாந்தி

அருமையான திரைக்கதை.
அடுத்தடுத்த முடிச்சுகள்..பளிச்சென்ற படப்பதிவு...கருத்தைக்கவரும் வசனங்கள் தாலாட்டும் இசை..அத்தனை கதாப்பாத்திரங்களும் வாழ்ந்திருக்கிறார்கள்..

இப்படித்தான் எழுத நினைக்கிறேன்...
பொய்யெழுதும் புலவனுக்கும் கூசுகிறதுகை..
நாசமாய்ப்போக..
எண்டா இப்படி படமெடுக்கலன்னு யார் அழுதா....எத்தனையோ படமெல்லாம் பெட்டிக்குள்ளயே தூங்குதாமே இதையும் அங்கயே தூங்க வச்சிருக்கலாமே.. கொடுமைன்னு கோயிலுக்குப்போனா பேய் குடும்பத்தோட வந்து ஆடுனா என்ன செய்றது...
யப்பா டைரக்டர்..படத்தை எடுத்திட்டு நீ ஒரு தடவை போட்டுப்பார்த்தாயா?
மனசாட்சிய தொட்டுச்சொல்லு உனக்கே அது சரியா இருந்துச்சா?
ஏம்பா...இவ்வளவு பணத்தைப்போட்டு படம்னு எடுக்குறீங்களே...மக்களையும் கொஞ்சம் யோசிங்கப்பா...காதுல பூ வைப்பா...பூக்கடையே வைக்காதீங்கப்பா...
இப்படியெல்லாம் படமெடுப்பதற்கு உலகின்  எந்த மொழியில் இருந்து காப்பி அடிச்சாலும் எடுங்கப்பா..பரவாயில்ல..
என்னடா. எதையோ எழுதிட்டு இருக்கமே..கொஞ்சம் மாத்தி ஒரு படத்தை எழுதலான்னு.  நம்பிப்பார்த்தேன்..
எல்லாம் என் நேரங்க...

ராத்திரி முழுசும் சொல்லிகிட்டே இருந்தேங்க....
எனக்கு நானே

ஓம்...சாந்தி...

8 கருத்துகள்:

 1. சாந்தி அடையட்டும் மன நிம்மதி கிடைக்கட்டும்

  பதிலளிநீக்கு
 2. அமைதிக்கு பெயர்தான் சாந்தி .இந்த படத்தைப் பார்த்தால் ஏதடி சாந்தின்னு ,நீங்க பாடிக்கிட்டு திரிவதாய் ,உங்க ஊர் மைதிலி மேடம் சொன்னார்களே ,உண்மைதானா :)

  பதிலளிநீக்கு
 3. எங்களை விட்டுட்டு சினிமாவுக்குப் போனா இப்படித்தான் ...நல்லா வேணும்.....வேணும்.....( சக்தி காலேஜ்ல பர்ஸ்ட் வந்ததுக்கு, எனக்கு மொபைல் வாங்கிக் கொடுக்கணும்னும், என்னை சினிமாவுக்கு கூட்டிட்டுப் போனும்னும், என்னை திருப்பியும் ஃபிளைட்ல கூட்டிட்டு போகணும் நும் சொல்லச் சொன்னாள்...அவளுக்கு டைம் இல்லையாம். அதனால் எனக்கே எல்லாம் தந்து விடச் சொல்லிட்டாள்..(மாட்ன)

  பதிலளிநீக்கு
 4. வாங்கிக்கிட்டீங்களா நல்லா....உங்க சின்னவளோ இதோ உங்களை மாட்டியது?!!!!!!

  பதிலளிநீக்கு