ஞாயிறு, 1 நவம்பர், 2015

தீராத விளையாட்டு

இணையம் வரவில்லையா
அவள் வர வேண்டும்.
வாசிங் மெஷின்
வேலை செய்யவில்லையா
அவள் கை வேண்டும்.
மொழியே புரியாத பாடலின்
அடுத்த வரி
அவளுக்குத்தெரியும்,

வாதங்களால்
என்னை வெல்பவள்..
பிடிவாதங்களால்
சில நேரங்களில்
தவிக்க விடுகிறாள்.

இது
அவளுக்கும்
எனக்குமென
உள்ள ஒரு
விளையாட்டு..

சின்னவளே
நடுவராயுள்ள
இந்த விளையாட்டில்
சலிப்பதே
இல்லை.
நான்

எப்போதும்
தோற்பதற்கு...

4 கருத்துகள்:

 1. ஆம்! தீராதவிளையாட்டுதான்....யப்பா தினம் தினம் எப்படிப்பா கவிதை பொறக்குது....இப்படி ஒரு சின்னவள் இருந்தால் பிறக்குமோ...ம்ம்ம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உள்ளத்தில் அன்பிருந்தால் எல்லாம் சாத்தியமே...
   நன்றி

   நீக்கு
 2. பதில்கள்
  1. வேறு யாரிடம் தோற்க..தோழி..
   இது சுகமான விளையாட்டு..
   நன்றி

   நீக்கு