வியாழன், 26 நவம்பர், 2015

உன்னோடு நானிருப்பேன்....

சின்னவள் 
ஒரு நாள்
சைக்கிள் கேட்டாள்..

முடியாதென்றேன்.

அழுது அடம்பிடித்து
இள ரோஜா 
நிறத்திலொன்று 

வாங்கிக்கொண்டாள்

ஓய்வான
ஒரு நாளில்
கற்றுக்கொடு
என்றாள்

நான்
கற்ற நாட்களில்
விழுந்த
நினைவு
வந்தது..

கற்றுக்கொடுத்தால்
என்னை தவிர்த்து 
தனியே 
பள்ளிக்கு
செல்வாளோ?

கற்றுக்கொடுக்காமலே  வந்துவிட்டேன்..

சைக்கிள் 
வாசல் படியோடு 
நின்று விட்டது..

சின்னவள் 
எப்போதும் 
என்னோடு
இருக்கிறாள்

15 கருத்துகள்:


 1. நினைவின் சங்கீதம்
  நினைவெல்லாம்
  சின்னவளின்
  நித்திரை நினைவுகளோ?
  முத்திரை பதித்தது நண்பரே!

  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 2. சின்னவள் உங்களுடன் எப்போதும் இருப்பதால்தான் இப்படிக் கவிதைகள் கொட்டுகின்றனவோ...!! சின்னவளின் நினைவுகளின் கவிதைக் காவியம்!!

  பதிலளிநீக்கு
 3. சைக்கிளின் சக்கரங்களாய் சுற்றிக்கொண்டே இருக்கின்றன சின்னவளின் நினைவுகள்!

  பதிலளிநீக்கு
 4. சின்னவளிள் சிங்கார நினைவுகள் நன்று நண்பரே...

  பதிலளிநீக்கு