செவ்வாய், 24 நவம்பர், 2015

பேசும் கவிதை...

படித்த பள்ளி,
படிக்கும் புத்தகங்கள்.
பெய்யும் மழை
பொய்யான
மனிதர்கள்.

பேசித்
தீரவில்லை
எனக்கும்
சின்னவளுக்கும்..

மிஞ்சிய மழலையில்
கண்கள் விரிய
கனவுகள்
சொல்கிறாள்.

என்
கவிதையின்
காகிதங்களை
நகர்த்தி
வைக்கிறேன்.

6 கருத்துகள்:

  1. கனவுகள் விரிய விரிய உங்கள் கவிதைகளும் பெருகுமே!!!! இப்போது கவிதையின் காகிதங்களை நகர்த்திவைத்தாலும் மீண்டும் அதில் கவிதைகள் வருமே!!!

    பதிலளிநீக்கு
  2. கவிதைகளை விடுங்கள் சின்னவளின் கனவுகளை ரசிப்போம்....

    ரசித்தேன் செல்வகுமார்..

    பதிலளிநீக்கு