திங்கள், 9 நவம்பர், 2015

எதிர்வினை....

சின்னவள் 
திடீரென 
எழுப்பினாள்
என்னை
அழகாக்குவேன்
என்றாள். 
எங்கிருந்தோ 
நாலைந்து
டப்பாக்களை 
எடுத்துவந்து
திறந்தாள்.

பலப்பல
வாசனைகளால் 
நிறைந்து
போனது 
முகமெனக்கு...

வெள்ளரி
இல்லை என 
முள்ளங்கி
கொண்டு 
விழிகளை மூடினாள்.

கடிகாரம் பார்த்து 
என் முகம்
கழுவினாள்...

சிறு கண்ணாடி கொண்டு 
பார் என்றாள்...

அய்யோ.....
மிக அழகாய் 
மாறிபோய்
இருந்தது 

அவள் முகம்.

7 கருத்துகள்:

 1. நன்றிகள்......உங்களின் வருகையும் வாழ்த்தும் என்னை எழுத(?) வைக்கிறது...
  தீபாவளி வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. அடடா....! ரசித்தேன்...

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 3. படத்தில் இருப்பது மாதிரி முகம் அழகாய் மாற்றிவிட்டதோ....!!!

  பதிலளிநீக்கு
 4. ரசனை மிக்க கவிதை!
  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு