வெள்ளி, 11 மார்ச், 2016

ஊருக்கு உபதேசம்..

சட்டங்களும் விதிகளும்  யாருக்காக இங்கே ..

ஒரு தலைநகரையே நாசப்படுத்தத்துணிந்த ,ஆன்மிகவாதி(?) எனப்படுபவர்  சட்டம் தந்த அபராதத்திற்கு பதிலளிக்கிறார்..

மரங்களை வெட்டவில்லையாம்..
கிளைகளை மட்டும் சிரைத்தார்களாம் ..

ஒரு பைசாவும் கட்டமுடியாதாம்..
நீதிமன்றம் தந்த தீர்ப்பை இப்படி அப்பட்டமாக விமர்சித்த அவருக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை ..
இதையே சாதாரண குடிமகன் செய்திருந்தால் ?

ஒரு சதவிதம் கலால்வரிக்காக நகைக்கடைகளை மூடி வைத்திருக்கிறார்கள்.
சவரனுக்கு 200ரூபாய் கூடுமாம்..
பொதுமக்கள் பாதித்துவிடுவார்களாம் .

ஆடு நனையுதென்று ஓநாய் அழுத கதை ..

போடும்சேதாரத்தில் 100 மில்லி குறைத்தாலே போதுமே..?
எத்தனை கடைகளில் சரியான பில்லோடு ,தரத்தோடு விற்கின்றார்கள்...

பெட்ரோலுக்காக எத்தனை முறை போராடினாலும் கேட்காத அரசு,விரைவில் நகைக்கடைகளின் நலன்  காக்கப்போவதை  காணலாம் .


கோடிகளை ஏப்பம்விட்ட  ஒருவன் ஓடிவிட்டான்.
கல்விக்கடன் பெற்றவரை போஸ்டர் அடித்து தேடுகிறான்..

ஒருமனிதனின் நேர்மையை  குறைக்க எத்தனை அவதூறுகள் ?

சாதித்த சகாயம்  பணிகள் சரியாய் செய்யவில்லை என மதிப்பளித்து இருக்கிறார்கள் சான்றோர் பெருமக்கள்.


பழம் நழுவி ..அதன் தலையிலேயே விழுந்துவிட்டது ..

ஒரு நாளிதழ்  படித்த பாவம் என்னை ..இப்படி ஆட்டுகிறது..


12 கருத்துகள்:

 1. ஆன்மிகவாதி செய்ததால் சரித்திரம்
  சாதாரண குடிமகன் செய்தால் தரித்திரம்...
  பணமிருந்தால் சட்டம் நம் சட்டைப்பையில்...

  பதிலளிநீக்கு
 2. சட்டத்தில் உள்ள ஓட்டையை அடைக்க யாருமில்லையே ஐயா.

  பதிலளிநீக்கு
 3. சட்டங்களில் மிகப் பெரிய ஓட்டைகள் உள்ளவரை இது அனைத்தும் தொடரும். புதிய புதிய சட்டங்கள் வரும்போதும் ஓட்டைகளோடே தான் வருகின்றன....

  பதிலளிநீக்கு
 4. செல்வா உங்கள் ஆதங்கம் புரிகின்றது. சட்டம் ஒரு இருட்டறை என்று சும்மாவா சொன்னார் அறிஞர்! எல்லாமே ஓட்டைகள் சல்லடைகளாக இருக்கும் போது நல்லவை எப்படித் தங்கும்? இங்கு நல்லது ந்டந்தால் வாழாது என்று உங்களுக்குத் தெரியாதா என்ன...வேதனைதான்..

  பதிலளிநீக்கு
 5. மக்கள் இனியாவது திருந்துவார்களா ? என்பது வரும் தேர்தலிவது பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
 6. இதுதான் இந்தியா
  நாமெல்லாம் அதன் குடிமக்கள்

  பதிலளிநீக்கு
 7. நிதிக்கும் நீதிக்கும் ஒரு சுழி தான் வித்தியாசம் நண்பரே. உங்கள் சுழி நன்றாய் இருந்தால் இதைக்கொண்டு அதை வாங்கலாம்.

  பதிலளிநீக்கு