புதன், 23 மார்ச், 2016

ஒன்னா மண்ணாப்போங்க...

கடுப்பாகுது...

என்ன கொடுமை?
ஒன்னும் பிடிக்கலை..

பழம் நழுவி விழுந்து
பாலும் கெட்டுப்போனது..

மக்கள் நலக்கூட்டணி என்னும் மாற்று அணியில் தெரிந்த சின்ன வெளிச்சப்புள்ளி மங்கிப்போனது .

தோழர்கள் இதை எப்படி ஏற்றுக்கொண்டார்கள்?

தனி மனிதனை முதலமைச்சர் வேட்பாளராக ஒத்துக்கொண்டால்
உங்களுக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

எதைச்சொல்லி ஓட்டுக்கேட்பீர்கள்..?

எதிர்க்கட்சித்தலைவராக மட்டுமல்ல..
ஒரு அரசியல் கட்சித்தலைவராகக்கூட செயல்பட முடியாதவரை எப்படி ஆதரிப்பீர்கள்..?

பத்திரிக்கையாளர்களை துப்பிய,,
தன் வேட்பாளரையே அடித்த ..
இன்னும் இன்னும்...

எந்த முகத்தை வைத்து ஓட்டுக்கேட்பீர்கள்...?

மதுவிலக்கு கொள்கையில் மாற்றம் உண்டா?

வாக்காளரை எப்படி அழைப்பது..?

மக்கழே...?

அரசியல் என்பதை எப்படித்தான் புரிந்து தொலைப்பது?
இது தான் அரசியல் என்றால் வெறுப்பு வருகிறது.

பாண்டவர்களாம்..

உங்களுக்கு யார் கண்ணன்?

என்ன ஒரு உற்சாகம்..

அன்புத்தலைவர்களே..
கூட்டணியில் உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கலாம்...

ஒரு சராசரித் தமிழனாய் என்னைப்போன்றோர்க்கு இதில் ஒரு சொட்டும் மகிழ்ச்சியில்லை..

மாற்றம் தமிழகத்துக்கு வருமுன் கூட்டணிக்கு வரவேண்டும்.

உங்கள் முந்தைய பரப்புரை கூட்டங்களை விட இனி அதிகம் கூட்டம் வரலாம்..

ஆனால் அதில் உணர்வுகள் குறைந்தே இருக்கும்.

இப்படித்தான் மாற்றம் இங்கே வரவேண்டுமென்றால்?

எனக்கென்னவோ..

ஒற்றுமையா சேர்ந்து..
ஒற்றுமையா காணாமப்போயிடுவீங்களோ?

அய்யோ....பயமாயிருக்கிறது..


14 கருத்துகள்:

 1. பேரறிஞர் அன்ணா 67இல் வென்றது போல் கேப்டன் முதலமைச்சராக பொறுப்பேற்பாராம்.. வை. கோ அவர்களே யாரை யாருடன் ஒப்பிடுவது என்பதில் கூட ஒரு வரைமுறை இல்லையா? அண்ணாவின் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் அதற்காக அவரை இப்படி கேவலப்படுத்தலாமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் சொல்ல நினைத்ததை திரு கொ.வை.அரங்கநாதன் அவர்கள் சொல்லிவிட்டதால் நான் வழிமொழிவதோடு விட்டுவிடுகிறேன். கலைஞரைப் பழிவாங்க, தோழர்களைப் பயன்படுத்துகிறார் வை.கோ.

   நீக்கு
 2. கொள்கை எல்லாம் அப்புறம் ,பதவிதான் முக்கியம் ,அரசியல்லே இதெல்லாம் .......:)

  பதிலளிநீக்கு

 3. நம் பதிவுலக அரசியல் போலத்தான் தமிழக அரசியலும் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. அரசியலில் காமெடித் தலைவர்களின் காலம் இது...

  பதிலளிநீக்கு
 5. மனம் ஏற்க மறுக்கும் திணிப்பு.
  த ம 4

  பதிலளிநீக்கு
 6. அரசியலில் எதுவும் சாதாரணம் என்பார்கள்
  தங்களின் ஆதங்கம் புரிகிறது

  பதிலளிநீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயோ ஐயோ பயமா இருக்குதே...இதைக் கேட்ட நாளிலிருந்து...நான் என் மூட்டை முடிச்சுகளைக் கட்டத் தயாரான நிலையில்....மே 16ம் அடுத்த முட்டாள்தினமாகிவிடக் கூடாது

   கீதா

   நீக்கு
 8. இதுக்கே கோவ பட்டா எப்படி? இன்னும் எவ்வளவு இருக்கு? பொறுமை ப்ளீஸ்.

  பதிலளிநீக்கு