புதன், 16 மார்ச், 2016

நீ தானே....என்..

உயிர்ப்பூக்கள்
தொடுத்த
மாலை
நீ.

இரண்டாம் 
தாய்.

என்
பாவங்களின்
மன்னிப்பு.

என்
தோட்டத்தில்
மலர்ந்த
ரோஜா..

புன்னகை
மட்டுமே
ஏந்திய
தேவதை..

புத்தகக்காதலி.

எதுவும்
மறைக்க முடியாத
என்
ஆன்ம
ஸ்நேகிதி.

இருண்ட வானின்
ஒளி
நட்சத்திரம்.

சிறு சிரிப்பில்
என்
உயிர்
ஒளித்து வைக்கிறாய்.

அந்திவானின்
செவ்வொளிக்கீற்று.

என்ன
பரிசு வேண்டுமென்கிறேன்.
பிறந்தநாளில்.

எப்போதும்
என்னோடிரு
என்கிறாள்..

சின்னவளுக்கு
எப்படி
சொல்வது..

இருப்பதே
அவளுக்காய்
என்பதை..

14 கருத்துகள்:

 1. சின்னவளின் பிறந்த தினமா?!!!! அட! அழகான கவிதைப் பூங்கொத்து பிறந்தநாள் பரிசாக சின்னவளுக்கு!!!

  வாழ்த்துகள் சின்னவளே!

  பதிலளிநீக்கு
 2. அடடே அதுக்குத்தான் சென்னைப் பயணமா?
  நல்லகவிதையை விட சிறந்த -எளிய, வலிய- பரிசு வேறென்ன? மருமகளுக்கு என் மணம்நிறை, மனம்நிறை வாழ்த்துகள்.
  மென்மையான கவிதை தந்தமைக்கு என் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 3. சூரியாவுக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 4. மருமகளுக்கு எமது வாழ்த்துகளும்....

  பதிலளிநீக்கு
 5. சின்னவளுக்கு வாழ்த்துக்கள்
  கவி அருமை நண்பரே...

  பதிலளிநீக்கு
 6. சின்னவளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  த ம 5

  பதிலளிநீக்கு
 7. வாவ்!! சூர்யாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 8. அருமை சூர்யா சகோதரிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 9. ஆனா தந்தைக்கு இலக்கணமா எங்கள் கூட இருப்பதில்லையே சங்கரன் அங்கிள்..

  பதிலளிநீக்கு