வியாழன், 20 அக்டோபர், 2016

கற்பனை என்றாலும்...

ஒரு
ஒப்பில்லாக்காதலி
கண்டெடுத்தேன்..
கனவுகளில்
வெகுநேரம்
இருக்கின்றாள்..
நான்
கண்ணசரும்
வேளைகளில்
சிரிக்கிறாள்.

மின்னலென
வந்துவந்து
போய்விடுவாள்.
இன்னும்
கொஞ்சம்
இரு
என்பேன்.
இடியெனச்
சிரிக்கின்றாள்.

மழலையென
பிதற்றுகிறேன்
அவள்
மடிசாய
வீழுகின்றேன்...

வாழ்ந்த கதை
நான் சொல்ல
அருவியாய்
கண்ணீர் அவளுக்கு..

வெற்றி
என்னை
சேருமென
விரல்
கொண்டு
கோதுகிறாள்..

வீரனடா...
உனக்கென்ன
கவலை
என்று
மோதுகிறாள்..

காமமில்லை
மருந்துக்கும்..
சாமத்திலும்
சன்னல் மூடப்
போவதில்லை..

முகம் உண்டு
அவளுக்கு
தினம்தினம்
நான்
பார்ப்பதுபோல்..

குரலுண்டு
அவளுக்கு..
குயில்போல
கருப்பில்லை..

அம்மன்
சிலைக்கொரு
சந்தனக்காப்பென
ஒப்பனைகள்
தினம்
மாற்றுகிறேன்..

அற்பனுக்கு
வந்த
ஒரு வாழ்க்கையென
எப்போதும்
அவள்
குடையாக
விரிகின்றேன்.

கட்டியழ
வேண்டும்.
என்
கவியால்
கொல்லவேண்டும்..

எத்தனையோ
கவி படித்தேன்..
எங்கெங்கோ
வேர் பிடித்தேன்..

முட்டும் ஒரு
வார்த்தை
சொல்ல
மூச்சுமுட்டிச்
சாகின்றேன்..

காதல் சொன்னால்
காணாமல்
போவாளோ
கண்ணெல்லாம்
வியர்க்கின்றேன்..

அவசியம்
வருவாள்
என்
அந்திக்கனவுகளில்..

எத்தனைநாள்
தூக்கிச்சுமக்க..

எனைச்சுமக்கும்
நாளுக்குள்
சொல்லித்தான்
விடவேண்டும்..

10 கருத்துகள்:

 1. கற்பனை காதலி என்றாலும் வித்தகனாய்
  கவிதை சொன்னவிதம் அழகு.ஏதோ மயிரிழையின் ஏக்கம் துக்கமாகாமல் பார்த்து கொள் செல்வா கவியாறு வற்றாதிருக்க

  பதிலளிநீக்கு
 2. கற்பனை காதலி என்றாலும் வித்தகனாய்
  கவிதை சொன்னவிதம் அழகு.ஏதோ மயிரிழையின் ஏக்கம் துக்கமாகாமல் பார்த்து கொள் செல்வா கவியாறு வற்றாதிருக்க

  பதிலளிநீக்கு
 3. “பூத்த ஜோதி வதனம் திரும்புமேல் புலன் அழிவுற்றொரு புத்துயிர் எய்துவேன்” இது பாரதியின் பிள்ளைக் காதல். இதுபோல் “காதலி” இல்லாத கலைஞர்-எழுத்தாளர் யாருமில்லை. எனக்கும் கூட அப்படி இருந்ததன் விளைவே எனது “காதல் கடிதம்”. உங்கள் காதல் கவிதையாய்வளர்க!

  பதிலளிநீக்கு

 4. நல்ல வேளை நீங்கள் ஆணாக போய்விட்டீர்கள் இல்லையென்றால் இப்படி அழகான கவிதை எழுதும் உங்களை தேடி வந்து என் காதலை சொல்லி இருப்பேன்...

  பதிலளிநீக்கு
 5. நீங்கள் சொன்ன காதலியை நான் தேடிப் போகிறேன் அதை என் மனைவியிடம் மட்டும் சொல்லிடாதீங்க பாஸ்

  பதிலளிநீக்கு
 6. Ahaa! Ungalaal dhan ippadi mudigiradhu. Ungal karpanaiyin uchathirke vaasagargalai azhaithu selvadhu ungal kavidhaiyin thani chirappu. Analum ungal karpanai kadhaliku konjam kall nenjam dhan. Inneram Sokki irukka Vendama!!!!!

  பதிலளிநீக்கு

 7. அருமையான வரிகள் - தங்கள்
  பதிவை வரவேற்கிறேன்.

  பதிலளிநீக்கு