செவ்வாய், 18 அக்டோபர், 2016

நித்திய ராத்திரி

ஒரு உறக்கத்துக்கான முன்னேற்பாட்டில்புத்தகம்,
தண்ணீர்ப்போத்தல் எடுத்துவைக்கிறேன்.
நேற்றைய மிச்சக்கனவுகள் மடிந்துகிடக்கும் போர்வை உதறித்தூவுகிறேன்..
சில கீழ் விழுகின்றன.
கவனமாய்ப்பொறுக்கி
ஊதியகற்றிய தூசி போனதும்..
படுக்கையில் கிடத்தி...
தலையணை துழாவும்
கரங்களின் விரல் பின்னும்
நீள முடியொன்று..
அறுத்துவிட்ட இரவை
விழித்துக்கடக்கவேண்டும்..

அணைந்த விளக்கு
ஒளி பெறுகிறது

7 கருத்துகள்:

  1. அழகான கவிதை......//நேற்றைய மிச்சக்கனவுகள் மடிந்துகிடக்கும் போர்வை///// மிகவும் பிடித்த வரி

    பதிலளிநீக்கு
  2. Indha iravil ungal kavidhaiyai vasithu vitten. Meendum meendum vaasithu kadakka vendum indha iravai. Thookam parikkum ezhuthu valimai.

    பதிலளிநீக்கு